24 special

குஜராத் பிஜேபியின் சோதனைக்கூடம்..! ஷாக் கொடுத்த ஜேபி நட்டா !

Jp naata
Jp naata

குஜராத் : குஜராத் எப்போதும் பிஜேபியின் ஆய்வுக்கூடம். குஜராத் ஆட்சி மற்றும் கட்சியின் கட்டமைப்புக்கள் சோதனைக்கூடமாக இருக்கிறது. இந்த மாதிரியை நாடுமுழுவதும் செயல்படுத்துவோம் என ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.


இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள ஜேபி.நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது " குஜராத் எப்போதும் பிஜேபியின் ஆய்வுக்கூடம். குஜராத் ஆட்சி மற்றும் கட்சியின் கட்டமைப்புக்கள் சோதனைக்கூடமாக இருக்கிறது. இந்த மாதிரியை நாடுமுழுவதும் செயல்படுத்துவோம். ஒரு கட்சித்தலைவராக இந்த மாதிரியை முன்னெடுத்துச்செல்வது எனது பொறுப்பு.

காங்கிரஸ் சகோதர சகோதரிகளின் கட்சியாக மாறிவிட்டது. பிராந்திய கட்சிகள் குடும்பக்கட்சிகளாக மாறிவிட்டதால் நாட்டில் இப்போது பிஜேபி மட்டுமே உண்மையான தேசிய கட்சி. திரு.நரேந்திர மோடி கட்சிப்பொறுப்பாளராகவும் பின்னர் முதலமைச்சராகவும் இருந்தபோது கட்சியை வளர்த்து மாற்றத்தின் ஊடகமாக மாற்றுவதற்கான சோதனைகள் குஜராத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன.

மோடிஜி குஜராத்தில் ஒரு வளர்ச்சி மாதிரியை உருவாக்கினார். தேசிய அளவில் குஜராத்தில் மோடி மேற்கொண்ட சோதனையின் பிரதிபலிப்பை தற்போது குஜராத் மாடலாக காண்கிறோம். முதல்வர் விஜய் ரூபாணி மற்றும் அவரது அமைச்சரவை மொத்தமும் ராஜினாமா செய்து பூபேந்திரபடேல் தலைமையில் புதிய அரசு அமைந்தபோது கடந்த ஆண்டு பிஜேபி மேற்கொண்ட பாதுகாப்பு மாற்றம் ஒரு பரிசோதனையே.

வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட பிரதமர் மோடியின் அரசியல், சாதி மதம் குடும்ப அரசியல் வம்ச அரசியல்  ஆகியவற்றிற்கு கடும் சவாலாக உள்ளது. பிஜேபி இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியுள்ளது" என தெரிவித்தார். மேலும் காந்திநகரில் உள்ள பிஜேபி தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்றினார்.