24 special

கியான்வாபி மசூதி வழக்கு..! உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு !

mosque case
mosque case

புதுதில்லி : கியான்வாபி மசூதி வளாகத்திலும் அதன் கிழக்கு சுவரிலும் உள்ள ஹிந்து தெய்வங்களை வழிபட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதையடுத்து நீதிமன்றம் மசூதியை ஆய்வுசெய்ய வழக்கறிஞர் தலைமையிலான குழு ஒன்றை நியமித்திருந்தது. அந்த குழு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபோது ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.


அதைத்தொடர்ந்து மசூதி நிர்வாக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசேபா அஹ்மதி உச்சநீதிமன்றத்தில் அவசரமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கியான்வாபி மசூதியில் நடைபெறும் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்தக்கோரி குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் "வாரணாசி சொத்து தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.



இது வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தின்கீழ் வருகிறது. தற்போது ஆய்வுநடத்த கோர்ட் கமிஷனருக்கு உத்தவிட்டுள்ளது. ஆனால் பழங்காலத்தில் இருந்தே இந்த இடம் மசூதியாக இருந்துவந்திருக்கிறது" எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி " நாங்கள் ஆவணங்களை பார்க்கவில்லை. அதுகுறித்து எந்த ஒரு விஷயமும் எங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கையில் தடுத்து நிறுத்த நாங்கள் எப்படி உத்தரவு போடா முடியும். சிவில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்னர் அதன் தீர்ப்புகளை இந்த நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும். 

தற்போது வழக்கு விசாரணை சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் மசூதியை ஆய்வுசெய்வதை நிறுத்த சொல்லி எங்களால் உத்தரவிடமுடியாது" என தீர்ப்பளித்தார். மேலும் மசூதியை ஆய்வுசெய்ய உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தகவல் கிடைத்ததையடுத்து நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவில் நீதிமன்றம் தனது உத்தரவில் " நீதிமன்ற ஆணையர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தினால் மாவட்ட நிர்வாகம் வழக்கு பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு வாரத்திற்குள் மசூதியில் உள்ள அனைத்து இடங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வீடியோ பதிவுசெய்யப்படும் என கூறப்படுகிறது.