புதுதில்லி : நேற்றுமுன்தினம் மதரஸாக்களில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என உத்திரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படலாம் என உள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உத்திரபிரதேச மாநில மதரஸா கல்வி வாரியம் நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் பள்ளிகள் தொடங்குமுன்னர் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என அறிவித்தது. அதைத்தொடர்ந்து மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
" மத இடங்கள் மட்டுமில்லை எல்லா இடங்களிலும் தேசிய கீதம் படப்படவேண்டும். இதுதொடர்பான இறுதி முடிவு உயர்மட்டக்குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு எடுக்கப்படும். தேசிய கீதம் அனைத்து இடங்களிலும் பாடப்பட வேண்டும். அது நல்ல விஷயம். இது நமது தேசியகீதம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து இடங்களிலும் தேசிய கீதம் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
உத்திரபிரதேசத்தில் உலா மதரஸாக்களில் தேசிய கீதம் கட்டாயமாக்கப்பட்டது நிச்சயமாக கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. இதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்" என செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் நரோத்தம் தெரிவித்தார். அமைச்சர் மிஷ்ரா அதிரடியான செயல்களில் இறங்குபவர் என்பதை மாநில மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
இறையாண்மையை சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்ட பத்திரிக்கையாளர் மட்டுமல்லாமல் அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ஹரியானா மாநில கல்வியமைச்சர் கன்வர்பால் குஜ்ஜார் செய்தியாளர்களிடம் நேற்று மாலை "ஹரியானா தேவைப்பட்டால் இந்த விஷயத்தை பரிசீலிக்கும்" என கூறியுள்ளார்.