இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், ரசிகர்களின் இந்த ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தால் பல அரசியல் தலைவர்கள் அதற்கு எதிராக தங்கள் கோபத்தையும் கண்டனத்தையும் பதிவிட்டு வருகின்றனர் அந்த வகையில் தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்திற்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நாடு முழுவதும் இந்த ஜெய் ஸ்ரீ ராம் பற்றி தான் பல விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் இது பற்றிய கருத்துக்களும் கமெண்ட்களும் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, மேலும் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெய் ஸ்ரீ ராம் என்பது ஒரு முழக்கம் தான் என்றும் விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் அதை விமர்சிக்க கூடாது என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். தமிழக துணை பாஜக தலைவர் நாராயணன் மைதானத்தில் ரசிகர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கூறியது அவர்களுடைய உரிமை என்றும் அதை விமர்சிப்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார் மேலும் இது குறித்து செய்தியாளர்கள் எல் முருகனிடம் கேள்வி எழுப்பிய போது அவர் பத்து முறை ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்தை கூறிவிட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி பாஜகவை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துவரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூறியது தற்போது அரசியல் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது, அதாவது ஜெய்ஸ்ரீராம் என்று ரசிகர்கள் கத்தியது மனிதாபிமானமற்ற செயல் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது இணையதளங்களில் கமெண்ட்களை பறக்க விட்டது இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பேசப்படும் நிலையில் இடதுசாரிகள் தரப்பில் 'சாரி பாகிஸ்தான்' என்று டிரெண்டு இணையதளத்தில் செய்யப்பட்டது. மேலும் இடதுசாரிகள் இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்தியது தவறு என்றும் தனது கருத்தை தெரிவித்த நிலையில் மறுபக்கம் வலதுசாரிகள் ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களிடம் பலமுறை தவறாக நடந்து கொண்டிருக்கிறார்கள் அதை ஒப்பிடும்போது இது மாபெரும் தவறு ஒன்றும் கிடையாது என்று வாதங்களை முன் வைத்துள்ளனர்
இப்படி நாடு முழுவதும் பேசு பொருளாகிய ஜெய்ஸ்ரீராம் கோஷத்தைப் பற்றி பாஜக மூத்த தலைவர் ஹச் ராஜா தனது கருத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் கடுமையாக சாடி பேசியுள்ளார் அதாவது தனது எக்ஸ் பக்கத்தில் 'பாரத நாட்டின் அரசியலமைப்பு சட்ட கையெழுத்து வடிவின் முதல் பக்கத்தில் எம்பெருமான் ஸ்ரீராமரின் படம் உள்ளது என்றும் இன்றளவும் பாராளுமன்றத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது எனவே ஸ்ரீ ராமரின் கோஷம் என்பது தவறானதல்ல என்றும், புருஷோத்தமன் ஸ்ரீராமர் நம் நாட்டின் அடையாளம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் பல மனைவிகளோடு வாழும் கும்பலுக்கு ஸ்ரீ ராமரின் கோஷம் எரிச்சலை தான் ஏற்படுத்தும்' என்று மறைமுகமாக பேசியது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது .இப்படி நாடு முழுவதும் இரு தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில் ஒரே அடியாக இடதுசாரிகளை வாய் அடைத்து போக வைக்கும் அளவிற்கு எச். ராஜாவின் பதிவு அமைந்துள்ளது, மேலும் பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவின் கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது