சென்னையில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்னை ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ், திமுக வளர்ச்சி அடைந்ததாகவும், கட்சி வளர்ச்சி அடித்திருப்பதாகவும் மாநில தலைவர் அழகிரி கூறினார். கட்சி தலைமையில் மாற்றம் இருக்கிறதா? இல்லையா என்ற குழப்பத்தால்? எந்த தலைவர்களும் மாநில தலைவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் கட்சி வளர்ச்சி பாதிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் செயலர் சிடி மெய்யப்பன் முதல் நபராக கூட்டத்தில் கொளுத்தி போட்டார்.
அதன் பின் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக அதை நாம் ஒதுக்கி தள்ளிவிட முடியாது. சமூக வலைதளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அரசியல் தீவிரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் அனைத்திலும் மந்தமாக இருக்கிறது என்று தன் கட்சியை மட்டம் தட்டி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இளங்கோவிற்கு எதிராக தலைவர்கள் கோஷத்தை எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட சோனியா காந்தி மூத்த தலைவர் இளங்கோவன் பேசட்டும் அவரது அரசியல் திறமையை அவர் கூறுகிறார் யாரும் குறுக்கிட வேண்டாம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய இளங்கோவன் தமிழகத்தில் மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின் தமிழ்நாட்டு மக்களிடம் அவர்களது கொள்கையை தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். என்று சோனியா காந்தியிடம் இளங்கோவன் போட்டு உடைத்து விட்டார்.
அவர் சொன்னதில் எந்த தப்பும் இல்லை, கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை ஆனால் தற்போது இது பேசும் பொருளாக மாறிவிட்டது என்று கூறினார். தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த சோனியா, பிரியங்காவை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கோ, காமராஜர் அரங்கத்திற்கோ அழைத்து செல்லாமலும் சிறப்பான வரவேற்பு அளிக்காமலும் உள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டார்கள் சோனியா பிரியங்காவை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம் அதனினும் செய்யவில்லை. ஆனால், ஆளும் கட்சியினர் ஏற்பாடு செய்த விழாவிற்கு தான் வருகிறார்கள் என்று எண்ணி காங்கிரஸ் தலைமைக்கு வரவேற்பு பணிகளை செய்யாமல் இருந்து விட்டனர். இதனால் சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மீது கோபத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது. சென்னை வந்த சோனியாவை முறையாக காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மாநாடு முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் செய்தியாளர்கள் பாஜக வளர்ந்துவிட்டதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது தொடர்பான கேள்விக்கு, “தமிழ்நாட்டில் பாஜக வளர்வதாக பாஜகவே சொல்வதில்லை. வேறு எந்த அரசியல் கட்சிகளும் சொல்வதில்லை. ஒரு சில நண்பர்கள் அப்படி சொல்லி வருகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தமிழகத்தில் போய் பாஜக எப்படி வளரும்? அதற்கு வாய்ப்பே கிடையாது. ஈவிகேஎஸ் இளங்கோவன் அப்படி சொல்வது விசித்திரமாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.இதற்கிடையில் ஆளும் கட்சிக்கு பாஜகவின் வளர்ச்சியை பார்த்து பயம் வந்துவிட்டது என்றும் அண்ணாமலையின் நடைப்பயணம் மூலம் தமிழக மக்கள் பாஜகவின் வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாக கூறுகின்றனர். இதன் தாக்கத்தை நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்படுத்துவர்கள் என்றும் கூறப்படுகிறது.