
ஹனுமான் சிலை பொதுவாக ராமர் கோயிலிலும் கிருஷ்ணன் கோவிலிலும் தான் பார்க்க முடியும். ஆனால் இங்கு கோயம்புத்தூரில் உள்ள ஒரு முருகன் கோவிலில் மிகவும் பெரிய அளவிலான அனுமன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா???இக்கோவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியதடாகம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். இது கோயம்புத்தூரில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும், மேலும் கோயம்புத்தூர் டூர் பேக்கேஜ்களின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயில் ஒரு மலையின் உச்சியில் கம்பீரமாக உள்ளது, சுற்றியுள்ள நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பறவைக் காட்சியை வழங்குகிறது. கோவிலைச் சுற்றியுள்ள இயற்கை ஒளி மற்றும் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்பு, வார இறுதியில் மீண்டும் உருவாக்க மற்றும் ஓய்வெடுக்க இது சரியான இடமாக அமைகிறது.
மேலும் இக்கோயிலில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வாணை சன்னதிகளும், சிவன், ஆஞ்சநேயர், கன்னிமூலகணபதி, நவகிரகம், இடும்பன், பாதவிநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம்,தைப்பூசம் 2 நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மேலும் ஐப்பசி மாதம் சூரசம்காரம், திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது. மேலும் இவை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை முருகனிடம் கூறி வழிபட்டு வருவதன் மூலம் அவர்களின் கஷ்டங்கள் தீர்ந்து விடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து கோவிலில் முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கும் காரணத்தினால் திருமணம் ஆகாதவர்களும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் திருமணம் ஆகும் என்பது நம்பப்படுகிறது.
மேலும் குழந்தை இல்லாதவர்கள் முருகனிடம் சென்று குழந்தை வரம் கேட்டு வந்தால் குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பப்படுகிறது. இந்த நிலையில் இக்கோவிலில் மிகப்பெரிய அனுமன் சிலை உள்ளதற்கு என்ன காரணம் என்று கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதாவது சஞ்சீவி மலையுடன் இம்மலையைக் கடந்து செல்லும் போது, ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தாகம் ஏற்பட்டது. இங்குள்ள முருகப்பெருமானிடம் தண்ணீர் வேண்டி வேண்டினார். இறைவன் தனது வேலினால் இங்குள்ள ஒரு இடத்தைக் குத்தினார், அங்கிருந்து நீர் பெருகி நதியாகப் பாய்ந்தது. அது மட்டுமல்லாமல் தனது வள்ளி தெய்வானையுடன் காட்சியையும் அனுமனுக்கு கொடுத்துள்ளார். அதனால்தான் இக்கோவிலுக்கு அனுவாவி என்ற பெயரும் வந்தது என்று கூறப்படுகிறது அதுதான் இந்தக் கோவிலின் வரலாறும் கூட!. மேலும் இதன் மூலம் ராமாயணம் காலத்திலும் முருகனின் வழிபாடு இருந்ததற்கு இக்கோவிலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
குமார-முருகா அனுமனுக்கு உதவியதால், இந்த மலை ஹனுமகுமாரன் மலை என்றும் போற்றப்படுகிறது. மேலும் இந்த அனுபாவி கோயிலில் பின்புறத்தில் தான் மருதமலை கோவிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் 1969-ம் ஆண்டு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதோடு வழக்கமாக எல்லா ராமர் கோயிலிலும் ஹனுமனை பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக ஒரு முருகன் கோவிலில் ஹனுமன் சிலையை பார்ப்பது மிகவும் ஆச்சரியமானதாகவும், என்னை சிந்திக்க தூண்டுவதாகவும் உள்ளது. இந்த நிலையில் இது பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இக்கோவிலைப் பற்றி தெரியாத பக்தர்களுக்கும் பெரும் ஆசிரியத்தையும், அங்கு செல்ல வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.