
சிவன் யோக உறைவிடமாக காட்சியளிக்கும் இடமே கைலாயம்! பல யோகிகளின் ஞானப் புதையலாகவும் இந்து மாத புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகின்ற கைலாயங்களில் தென்கைலாயம் அகத்தியர் தவம் புரிந்த புண்ணிய மலை தமிழகத்தில் அமைந்துள்ளது. அதாவது மத்திய கைலாயம் திபத்திலும் சிவனின் முதல் கைலாயம் இமாலய மலையிலும் அமைந்துள்ள நிலையில் தென் கைலாயம் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் சிறுவாணி மலையை ஒட்டி கிழக்கு மேற்காக அமைந்துள்ள ஒரு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைக்கு வெள்ளையங்கிரி மலை என்றும் பெயர் உள்ளது, பெரும்பாலான மக்களால் வெள்ளியங்கிரி மலை என்ற பெயரே அறியப்பட்ட பெயராக கூறப்படுகிறது. அதோடு இம்மலையின் அடிவாரம் பூண்டி என்று அழைக்கப்படுகிறது சுமார் 3500 அடி உயரம் உள்ள இம்மலை ஏழு முடிகளைக் கொண்டது, அதோடு ஐந்தரை கிலோமீட்டர் தூரம் சென்று வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, அர்ஜுனன் வில், பீமன் களி உருண்டை என பல தளங்களும் இங்கு அமைந்துள்ளது.
மேலும் தென்னகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த புண்ணிய தலமான இந்த தளத்தில் அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்சபூதங்களும் ஒருங்க அமையப்பெற்ற பஞ்சபூத ஸ்தலமாகவும் விளங்குகிறது. அதுமட்டுமின்றி வெள்ளியங்கிரி மலையில் சிவபெருமான் பஞ்சலிங்கேசனாக ஆறடி அகலம் உள்ள சிறிய குகையில் பஞ்சலிங்கங்களாக காட்சியளிக்கிறார். இயற்கையோடு இயற்கையாக வெள்ளையங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக இருந்த சுயம்புலிங்கமாகும் பல ஞானிகளும் சித்தர்களும் இன்றளவும் நடமாடுகின்ற புனித மிக்க மலையாகவும் வெள்ளையங்கிரி மலை திகழ்ந்து வருகிறது. மலையின் உச்சியில் உள்ள பஞ்சலிங்க சிவனை காண பல பக்தர்கள் கையில் மூங்கில் குச்சியுடன் மலையேற ஆரம்பிக்கிறார்கள். அப்படி இவர்கள் வெள்ளியங்கிரி மலையில் பயணம் செய்வதும் பரமனை படிப்படியாய் நெருங்குவதும் சமம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் சிவகோஷம் எழுப்பிய வண்ணம் பக்தர்கள் வெள்ளையங்கிரி மலை மீது கூட்டம் கூட்டமாக ஏறி செல்வார்கள். மேலும் ஏழாவது மலையில் உள்ள பஞ்சலிங்க சிவனை காண ஒவ்வொரு மலையை கடந்து செல்லும் பக்தர்கள் பல அதிசயங்களையும் கண்டு செல்கிறார்கள் அதாவது இரண்டாவது மலையில் பயணிக்கும் பொழுது கைதட்டினால் பாறைகளின் இடுக்குகளில் இருந்து தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையும் இங்கு உள்ளது!
ஒருமுறை வெள்ளியங்கிரி மலையில் ஏறி இறங்கினால் நம்முடைய அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பதும் மனதில் நிறைந்த குழப்பங்கள் பாரங்கள் அனைத்தும் இறங்கிவிடும் என்பதும் பக்தர்களின் முக்கிய நம்பிக்கை அதுமட்டுமின்றி வெள்ளையங்கிரி மலையின் காற்று நம் மீது பட்டால் கூட தீராத நோய்களும் தீரும் என்றும் கூறுவார்கள். இப்படி பல நம்பிக்கையுடன் சிவபெருமானை காண செல்லும் பக்தர்கள் ஏழுமலையையும் தாண்டி சிவபெருமானை சந்திப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! ஏனென்றால், வெள்ளியங்கிரி மலை ஏறிக்கொண்டிருக்கும் பொழுதே உயிரிழந்தவர்கள் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் பெயரளாகி வருகிறது. அதாவது கடந்த வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்த சில நண்பர்களில் ஒருவர் வெள்ளியங்கிரி மலையில் ஏறும் போது அதிகாலையில் ஆறாவது மலை அடைந்த பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் அருகில் இருந்த நண்பர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டும் அவரது உயிர் பரிபோனது பதற வைக்கும் செய்தியாக வெளியானது.
மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மலை ஏறிய 24 வயது சேர்ந்த ஒரு இளைஞரும் இரண்டாவது மலையை கடக்கும் பொழுதே இதய கோளாறு ஏற்பட்டு இறப்பை தழுவியுள்ளார்! அதனால் மலை ஏறுவது என்பது மிகவும் எளிதான விஷயமல்ல அதற்கு நம் உடலையும் நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் அதோடு உண்பதற்கு தேவையான பொருட்களையும் நீர் போன்றவற்றையும் பக்தர்கள் தங்களுடன் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையும் கூறுகிறார்கள்! அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் வரும் வீடியோக்களை பார்த்துவிட்டு மழை ஏறுவதை எளிதான பயணம் என்று நினைத்து அனைவரும் மேற்கொள்ளக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடியோக்கள் நிறைய தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது.