24 special

ஹர்திக் பாண்டியாவிற்கும், க்ருணால் பாண்டியாவிற்கும் ஏற்பட்ட ஏமாற்றம்!!! களம் இறங்கிய மும்பை போலீசார்!!!தொடர்கிறது போலீஸின் விசாரணை!!!

HARDIK PANDYA, KRUNAL PANDYA
HARDIK PANDYA, KRUNAL PANDYA

இந்தியன் டீம் ஓட கிரிக்கெட் வீரர் தான் இந்த ஹர்திக் பாண்டியா. இவர் தற்போது இந்திய அணியின் துணைத் தலைவராகவும், சர்வதேச கிரிக்கெட் வீரராகவும் வளம் வந்து  கொண்டு உள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில்  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் தற்போது இருந்து வந்துள்ளார். இதற்கு முன்னர் குஜராத் டைட்டான்ஸ் அணியின் தலைவராக இருந்தார். அதன் பின் தற்போது மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு கேப்டனாக மாறியுள்ளார். மேலும் பொது நடந்து வரும் ஐபிஎல்லிலும் இவர்  சூப்பராக விளையாடுகிறார்!! இவர் கிரிக்கெட் வீரர்களில் ஆல் ரவுண்டர் என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் இவரின்  பந்து வீசும் முறையும் பேட்டிங்கும் ஆகிய இரண்டுமே சூப்பராக இவர் செயல்படுவதால் இவரை ஆல்ரவுண்டர் என்றே கூறுகின்றனர். இவர் குடும்பத்தில் இவர் மட்டுமல்லாமல் இவரின் சகோதரரான க்ருணால் பாண்டியாவும் ஒரு கிரிக்கெட் வீரர் தான்!! இவர்கள் இருவரும் கிரிக்கெட் துறையில் மிகவும் திறமையாக விளையாடி அவர்களுக்கான இடத்தை தக்க வைத்து இன்று விளையாட்டு துறைகளில் கிரிக்கெட்டில் ஒரு பிரபலமாகவே  இருவரும் உள்ளனர்.


                                                                                                                  

இந்த நிலையில் கிரிக்கெட் மட்டுமல்லாமல் வேறு தொழில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்து  ஹர்திக் பாண்டியாவும், க்ருணால் பாண்டியாவும் சேர்ந்து அவர்களுடன் மற்றொரு உறவு முறையான ஒன்றுவிட்ட  சகோதரரான வைபவ் பாண்டியா என்பவருடன் இணைந்து பிஸினஸ் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த தொழிலில் ஹர்திக் பாண்டியா 40 சதவீதம் முதலீட்டையும், க்ருணால் பாண்டியா 40% முதலீட்டையும் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரரான  வைபவ் 20%  முதலீடு செய்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் கிரிக்கெட் விளையாட்டில்  அவ்வபோது  பிசியாக இருப்பதினால் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரான வைபவ் இந்த தொழிலை கவனித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இந்த தொழிலில் வந்த லாபத்தை மூவரும் அவர்களின் முதலீட்டில் உள்ள பங்குகளுக்கு பிரித்துக் கொண்டனர்.ஆனால் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனமானது துவக்கத்தை போல  தொடர்ந்து வெற்றியாக செயல்படவில்லை. அதன் செயல்பாடுகள் குறைய தொடங்கியது.என்ன காரணம் என்று விசாரித்து பார்க்கும் போது தான் தெரிகிறது வைபவ் ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் சொந்தமாக பாலிமர் விற்பனை செய்யும் தனி நிறுவனத்தை தொடங்கி அதனை நடத்தி வருகிறார் என்று தெரியவந்தது.

                                                                                                                       

இப்படி இவர் புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனியில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் பழைய கம்பெனியில் இவர் 20% மட்டுமே லாபத்தில் எடுத்து வந்த நிலையில் ஹர்திக் இடம்  சொல்லாமல் தனது லாப சதவீதத்தை  33.3 என்ற விகிதத்தில் வைபவ் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஹர்திக் வைபவ்விடம் விசாரித்தபோது அதற்கு வைபவ் இதற்கு மேல் இதனை பற்றி பேசினால் உன்னுடைய பெயரை களங்கப்படுத்தி விடுவேன் என்றும் ஹர்திக் பாண்டியாவை மிரட்டியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வைபவ் மீது மும்பை  போலீசில் ஹர்திக் பாண்டியா புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் மும்பை போலீசார் வைபவ்வை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியா  கொடுத்த புகாரில் மொத்தமாக 4.3 கோடி அளவிற்கு இதுவரை வைபவ் மோசடி செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். ஒன்றுவிட்ட சகோதரர் என்று  நம்பி  தொழிலை ஒப்படைத்து தற்போது பெரும் ஏமாற்றத்தை ஹர்திக் பாண்டியாவும், க்ருணால் பாண்டியாவும் எதிர்கொண்டு வருகின்றனர்!! தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது!!