ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் டாப்ஸி பண்ணு என்னும் நடிகை!! இவர் தனது நடிக்கும் திறமையால் வேற லெவலில் திரைப்படங்களில் ஆக்டிங் செய்து இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் மற்றும் ஒரு பிலிம்பேர் OTT விருதுகளையும் வாங்கி ஒரு முன்னணி நடிகையாக தற்போது வரை இருந்து வருகிறார். இப்போது முன்னணி நடிகையாக இருக்கும் டாக்ஸி முதலில் திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்னர் மாடலிங் மட்டுமே செய்து கொண்டு வந்திருந்தார். அதன் பிறகு தான் 2010 ஆம் ஆண்டு முதல் முதலில் தெலுங்கு திரைப்படமான ஜும்மண்டி நாடம் என்னும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். முதலில் தெலுங்கு திரைப்படத்திலேயே அறிமுகமான இவர் அதன் பின் 2011 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் தனுசுடன் இணைந்து ஆடுகளம் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.
இந்தத் திரைப்படத்தில் இவருடைய ஆக்டிங் மற்றும் படத்தின் கதை இவருக்கு சூப்பராக அமைந்திருந்ததால் இந்தப் படத்திற்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகினர். அவ்வபோது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சில விளம்பரங்களிலும் நடித்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வந்தான் வென்றான் எனத் தொடங்கி காஞ்சனா 2 என தொடர்ந்து பல திரைப்படங்களில் தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இப்படி சூப்பராக திரை உலகில் கலக்கிக் கொண்டு இருந்த டாபிஸிக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று அவரின் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் டாபிஸி கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி வெளியில் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்துள்ளது யார் என்று பார்த்தால் டாபிஸியின் நீண்ட நாள் காதலரான மத்யாஸ் போ என்பவரை தான்!! எனது திருமணம் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியில் தெரியாதவாறு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் உதய்பூரில் அவசியமாக திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் இவரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகை டாபிஸிக்கு திருமணமானதை அனைவரும் தெரிந்து கொண்டனர்.
உண்மையா பொய்யா என்று தெரியாமல் அனைவரும் குழம்பிப் போய் இருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவில் ஆங்கில ஊடகம் ஒன்றில் நடிகை டாபிஸி பேட்டி ஒன்று அளித்துள்ளார்!! அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால்!! அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொது இடங்களில் கூற வேண்டுமா என்று அவருக்கு தெரியவில்லையாம் மற்றும் இவற்றை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவரின் நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்!! மேலும் என்னுடைய திருமணத்தை பொது விஷயமாக மாற்றுவதில் எனக்கு விருப்பமும் இல்லை என்று கூறியுள்ளார். ஏனெனில் பொது இடங்களில் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று எனக்கு கவலை இருந்தது. அதனால் தான் இந்த விஷயத்தை வெளியில் அறிவிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை என்று நடிகை டாப்ஸி கூறியுள்ளார். மேலும் அதற்கு முதலில் நான் மனதளவில் தயாராகவும் இல்லை என்றும் கூறியுள்ளார்!. அதனால் தான் என் திருமணத்தில் எனக்கு உண்மையாக இருக்கும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்று நடிகை டாப்ஸி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். இப்போது இது குறித்து செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது!! இதற்காகத்தான் ரகசிய திருமணம் செய்தாரா என்பது போல பல கமெண்ட்ஸ்களும் ரசிகர் மத்தியில் எழுந்து வருகிறது!!