உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச முதல்வராக முதல்முறையாக யோகி பதவியேற்றதும் மாநிலத்தில் நிலவிவந்த குற்றங்களையும் குற்றவாளிகளையும் ஒடுக்கியதோடு சட்டம் ஒழுங்கை சீர்படுத்தினார். மேலும் மாநில வளர்ச்சிக்காக பல்வேறு விரைவுச்சாலைகள் புதிய பள்ளிகள் மத்திய அரசுடன் இணைந்த பல்கலைக்கழகங்கள் என கல்வி மேம்பாட்டிற்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பல முன்னெடுப்புகளை தொடங்கிவைத்தார்.
இரண்டாவது முறையாக பதவியேற்றதும் மாநில பொருளாதார இலக்கை ட்ரில்லியனுக்கு கொண்டுசெல்ல பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பொருளாதார ஆலோசகர் ஒருவர் மாநில உயர்மட்டக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்தது வரும் 2022-27 வரையிலான ஐந்தாண்டுகளுக்கான திட்டவரைவை திட்ட செயலர் அலோக் குமார் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட மின் ஏலத்தில் மிகப்பிரபலமான ஏழு நிறுவனங்கள் ஒப்பந்தத்தை பெற்றுள்ளன. டெலாய்ட், பிசிஜி, க்ராண்ட் திரோட்டன் போன்ற உயர்நிறுவனங்கள் மின் ஏலத்தை பெற்றுள்ளதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப விளக்க மதிப்பீடுகளை யோகி தலைமையிலான உயர்மட்டக்குழு பரிசீலித்து வருகிறது.
இதன்மூலம் இரண்டரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகையில் பொருளாதாரம் ட்ரில்லியன் டாலருக்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச அரசு கடந்த மே 24 அன்று மின் ஏலத்தை அறிவித்திருந்தது. தொழில்நுட்ப முறையிலான ஏலங்கள் மே 25 அன்று தொடங்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய திட்டமிடல் துறை செயலர் அலோக்குமார் " நாங்கள் தொழில்நுட்ப மதிப்பீடுகளை அளவிட்டு வருகிறோம். ஏலதாரர்களை ஜூன் மத்தியில் தொழில்நுட்பரீதியான விளக்க அறிக்கைகளை சமர்ப்பிக்க கூறியுள்ளோம். ஜூன் மாத இறுதிக்குள் ஏலம் நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் என கருதுகிறோம்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் ரகுராம் ராஜன் மற்றும் நோபல் பரிசு வாங்கிய ஐந்துபேர் கொண்ட பொருளாதார நிபுணர் குழு பலலட்சங்கள் கொடுத்து ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருந்தும் அவர்களின் செயல்பாடுகள் என்ன என்பது இதுவரை தமிழக மக்களுக்கு தெரியவில்லை என்பது விந்தை. ஆனால் எந்த ஒரு பொருளாதார மேதைகளையும் நியமிக்காமல் அரசு ஆலோசகரை வைத்தே ட்ரில்லியன் டாலருக்கு பொருளாதாரத்தை உயர்த்திவரும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.