தீவிரமாக GST கவுன்சிலை எதிர்த்த கட்சிகளில் ஒன்று திமுக அதில் முக்கியமானவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பழனிவேல் தியாகராஜன் இந்த சூழலில் தமிழக முதல்வரே GST கவன்சிலை தமிழகத்தில் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை வைத்தார் இந்த சூழலில் மதுரையை தேர்வு செய்து நிதி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.
47வது ஜி.எஸ்.டி கவுன்சிலின் 2 நாள் ஆலோசனை கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அப்போது தமிழகம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி, அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்கள் அழைப்பை ஏற்று, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த ஒப்புக் கொண்டதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் சார்பாக, மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நிதி அமைச்சர் சீதாராமன் GST கவுன்சில் மூலமாக தமிழகத்தை வஞ்சிப்பதாக குற்றம் சுமத்தி, ஒரு GST கூட்டத்தை புறக்கணித்து இருந்தார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேலும் மதுரையில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியிலும் தியாகராஜன் பங்கேற்றார் இதுகடுமையான விவாதத்தை உண்டாக்கியது.
இந்த சூழலில் 48 வது GST கவுன்சில் கூட்டம் தமிழக தலைநகரான சென்னையில் நடைபெறாமல் மதுரையில் நடைபெறுவதாக கூறப்படுவது சந்தேகத்தை உண்டாக்கி இருக்கிறது, மதுரையை தேர்வு செய்ததில் பாஜகவின் குசும்பு இருக்கிறதோ எனவும் உடன்பிறப்புகள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்களாம்.
மொத்தத்தில் அடுத்த GST கவுன்சில் தமிழகத்தில் ஒரு புயலை கிளப்ப போகிறது, பொறுத்து இருந்து பாருங்கள் என்று கூறுகின்றனர் பாஜகவினர்.