புதுதில்லி : இந்திய ஆயுதப்படைகள் 4800 ஸ்னைப்பர் துப்பாக்கிகளை 450கோடிக்கும் அதிகமான மதிப்பில் வாங்குவதற்கான கோரிக்கையை பாதுகாப்பு கொள்முதல் வாரியத்திடம் என அழைக்கப்படும் AONனிடம் முன்வைத்திருந்தது. கடந்த மே மாதம் AON அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதற்கான செயல்முறையை தொடங்க அனுமதி அளித்துள்ளது.
நேற்று முன்தினம் AON வெளியிட்ட தகவலுக்கான கோரிக்கையில் (RFI)தொலைநோக்கி பார்வையுடன் கூடிய சுமார் 4800 ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் 78 லட்சம் வெடிமருந்துகள் பை இந்தியன் பிரிவின் கீழ் வாங்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்புடை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள ஆதாரங்களின்படி 4500 துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கும் 200கும் மேற்பட்ட துப்பாக்கிகள் இந்திய விமானப்படைக்கும் மீதமுள்ள துப்பாக்கிகள் கடற்படைக்கும் வழங்கப்படும் என கூறுகின்றன.
RFI தகவலின்படி இந்த புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகள் .338 லாபுவா மேக்னம் வெடிமருந்துகளை பயன்படுத்தும். அதன் எல்லை வரம்புகள் 1200 மீட்டர் அல்லது அதற்க்கு சற்று அதிகமான வரம்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் பயன்பாட்டு சேவைகள் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் அல்லது 5000 சுற்றுக்கள் கொண்டிருக்க வேண்டும்.
வெடிமருந்துகள் ஆயுட்காலம் 10 ஆண்டுகளை கொண்டிருக்கவேண்டும். இந்த கொள்முதலுக்கான முன்மொழிவு RFP 2022 செப்டம்பர் மாதத்திற்குள் தற்காலிகமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1963 வின்டேஜ் டிராகுனாவ் துப்பாக்கிகளே 1990களில் இருந்து இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது.எல்லைக்கப்பால் உள்ள எதிரி சினைப்பர்களின் அச்சுறுத்தலை முறியடிக்க இந்த புதிய ரக ஸ்னைப்பர்கள் வாங்கப்பட்ட உள்ளன.
கடந்த 2018ல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கையகப்படுத்துதல் கவுன்சில் 982 கோடி மதிப்பீட்டில் 5700 உயர்துல்லிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளை வாங்க அனுமதித்ததோடு அதற்கான வெடிமருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. அமெரிக்காவிடம் இருந்து பாரெட் எம் 95.50 BMG இத்தாலியிலிருந்து பெரட்டா விக்ட்ரிக்ஸ் ஸ்கார்பியோ ஆகிய ஸ்னைப்பர்களை குறைந்த அளவில் 2019ஆம் ஆண்டு இந்தியா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.