
மதுரையில் இருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசத்தி பெற்றது. அர்ஜுனா ஆறு மற்றும் வைப்பாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலை வழிபட்டு சென்றால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாகும். மேலும் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும் அம்மையுள்ளவர்களும் இருக்கன்குடி மாரியம்மானை வணங்கினால் அம்மன் அவர்களுக்கு அருள்பாவிப்பாள் என்றும் கூறப்படுகிறது. அதோடு அர்ஜுனா ஆறு மற்றும் வைபாறு ஆகிய இரு ஆறுகளுக்கு நடுவில் இந்த அம்மன் எழுந்தருளியதால் இந்த பகுதிக்கு இரு கங்கை குடி என்று முதலில் பெயர் இருந்து, அதற்குப் பிறகு வழக்காடலில் காலப்போக்கில் அந்த பெயர் மருவி இருக்கன் குடி என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இரண்டு ஆறுகளும் இடையில் அமைவதற்கும் ஒரு புராண கதைகள் கூறப்படுகிறது அதாவது மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்து மகாலிங்க மலை அடிவாரத்தை அடைந்த பொழுது அவர்கள் தங்களின் உடல் களைப்பை போக்குவதற்காக நீராட வேண்டும் என்று நினைத்த பொழுது அவர்களுக்கு அருகில் எங்கேயும் நீராடுவதற்கு ஏற்ற வகையில் நதிகள் இல்லை!
அதனால் அர்ஜுனன் பூமி மாதாவையும் கங்காதேவியையும் வணங்கி தன் அம்பை பூமியில் செலுத்தியதால் ஒரு நதி உருவானது அதுவே அர்ஜுனா ஆறு என்று கூறப்படுகிறது. மேலும் மாரியம்மன் திருக்கோவிலில் மற்றொரு பக்கத்தில் அமைந்துள்ள வைப்பாறு ராமாயண காலத்தில் ராவணனின் படையை வீழ்த்த இராமன் தன் படை பலத்துடன் மேற்கு தொடர்ச்சி மலையை வந்தடைந்தார் அப்பொழுது வீரர்களின் களைப்பினை நீக்க நீராட வேண்டும் என்று அங்கு ஏதேனும் நதி உள்ளதா என்று தேடிப் பார்த்துள்ளார்கள் அப்பொழுது அந்த வழியில் சென்ற ஒருவர் உலகில் உள்ள புண்ணியத் தீர்த்தங்கள் எல்லாம் ஒரு குடத்தில் சேமித்து வைத்து அகத்தியர் முனிவரால் இந்த இடத்தில் புதையலாக புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதனால் ராமன் அந்த புதையல் வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்து தனது பானத்தின் அம்பினை எய்து புண்ணிய தீர்த்தங்களை வெளிவர செய்தார் அதுவே வைப்பார் என்று அழைக்கப்படுகிறது வைப்பு என்றால் புதையல் என்று பொருள். இப்படி மாரியம்மன் திருக்கோவிலின் வடக்கிலிருந்து அர்ஜுனனால் உருவாக்கப்பட்ட நதியும் தெற்கில் ராமனால் உருவாக்கப்பட்ட புண்ணிய நதியும் ஓடுவது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும் கங்கையில் நீராடுவதன் மூலம் கிடைக்கும் புண்ணியத்தைப் போன்று இந்த நதிகளில் நீராடுவது மூலமும் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள் .
இதனை அடுத்து அம்பாளை தரிசிக்க வேண்டும் என்று ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்ததாகவும் அந்த முனிவருக்கு அசரீ ரீதியாக சித்திரை அர்ஜுனா ஆறுக்கும் பையாறுக்கும் இடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வருமாறு ஒரு குரல் கேட்டுள்ளது. இதனை அடுத்து அந்த முனிவர் அந்த மேட்டு பகுதியை அடைந்த பொழுது அம்மனே காட்சியளித்தால் இதனால் பரவசமடைந்த அந்த முனிவர் தன் கண்ணால் கண்ட அம்பாளின் உருவத்தை சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்தார். அதற்குப் பிறகு இயற்கை சீற்றத்தாலும் மலையாலும் ஆற்று மணல் புதைந்து போனதை அடுத்து சில காலங்களுக்கு பிறகு ஒரு சிறுமி அந்த வழியாக சாணம் எடுத்துக்கொண்டு செல்லும் பொழுது அவரது சாணக் கூடையை அவளால் தூக்க முடியாமல் போயிற்று, இதனால் தன் ஊர் மக்களை அழைத்து வந்து நடந்தவற்றை கூற ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சாணக் கூடையை தூக்கி அகற்றிய போது அதற்கு அடியில் அம்பாள் காட்சி கொடுத்துள்ளாள் அதன்படியே காட்சியில் கிடைக்கப்பட்ட சிலையை வைத்து மாரியம்மன் கோவில் அமைக்கப்பட்டு இருக்கன்குடி மாரியம்மன் என்ற பெயரில் அந்த இடத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் மக்களின் வேண்டுதல்களை அம்பாள் நிறைவேற்றி வருகிறாள்.