
தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை 2021ல் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் பாஜகவின் நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதற்கு முன் இருந்ததை விட அதிக அளவில் மக்களின் ஆதரவையும் கடந்த இரண்டு வருடங்களில் பெற்றுள்ளது பாஜக இதற்கும் மிக முக்கிய காரணம் அதன் மாநில தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பேற்கப்பட்டது தான் என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் முன்வைக்கும் கேள்விகள் கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்திற்கும் ஆளும் அரசிலும் பதில் இல்லை. இதனால் அண்ணாமலைக்கு ஆதரவான மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது பலர் வெளிப்படையாகவே கட்சி சார்ந்து ஒருவரை ஆதரிக்க வேண்டுமா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் அண்ணாமலை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
இதனால் காங்கிரஸ் தலைமை கோபமடைந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரின் பதவியையும் மாற்ற முயற்சித்தது தலைவர் பதவியில் ஒரு புது இளம் ரத்தத்திற்கு வாய்ப்பளித்தால் நிச்சயமாக பாஜகவை விட அதிக மக்கள் செல்வாக்கையும் ஓட்டு வங்கியையும் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற நோக்கத்திலும் காங்கிரஸ் இந்த முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டு வந்தது அதற்கேற்றார் போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வந்த கே எஸ் அழகிரியின் பதவிக்காலமும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலே முடிந்தது. அப்போதிலிருந்தே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் யாரை அமர்த்தலாம் என்று தேடலும் காங்கிரஸ் தலைமை மேற்கொண்டு வந்தது. ஆனால் அந்த நேரங்கள் அனைத்திலும் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது அது முடியும் வரை நானே தலைவராக இருக்கிறேன் என்று அழகிரி தனது பதவியை தக்க வைத்துக் கொண்டே வந்தார்.
ஆனால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டே வருவதை அடுத்து கே எஸ் அழகிரியை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கி செல்வப் பெருந்துறைக்கு பொறுப்பை கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கே எஸ் அழகிரி சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அதில், இன்றைக்கு ஒரு இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் அந்த இயக்கத்திடம் கட்டுப்பாடான அமைப்பு இருக்க வேண்டும். அந்த நிலை தற்போது வந்து விட்டது, பாஜகவின் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளாக இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழு லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல ஆர் எஸ் எஸ் அமைப்பினரும் அல்ல! ஒரு சைக்கிளில் வந்து தயிர் சாதம் கட்டிக்கொண்டு தேர்தல் நேரத்தில் பூத்தில் அமர்கிறார்கள். தேர்தல் வேலைகளை கடுமையாக மேற்கொள்கிறார்கள், அவர்களுக்கு பிரியாணி பொட்டலமும் 500 ரூபாய் நோட்டும் பாட்டிலோ கொடுக்க வேண்டாம்! ஏனென்றால் அவர்கள் கொள்கைக்காக அங்கு வந்து அமர்கிறார்கள்.
ஆனால் பாஜகவை எதிர்ப்பவர்கள் எல்லா வாக்குச்சாவடிகளும் ஆட்களை வைத்திருக்கிறார்களா? பிரியாணி பொட்டலம், 500 ரூபாய் நோட்டு, பாட்டில் போன்றவற்றை கொடுக்காமல் நம் கட்சியினர் அங்கே சென்று உட்காருவார்களா? இதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் அவற்றை முடிவு செய்யாமல் பேருக்கு சத்திரம் போல் ஒன்றை நடத்திக் கொண்டு வந்தால் ஒரு சந்தை கடை போல் ஒன்றை வைத்திருந்தால் உங்களால் அதை வைத்து ஒரு யுத்தத்தை எதிர்கொள்ள முடியாது! இவற்றை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கே எஸ் அழகிரி பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரலானது இதனை அடுத்து கே எஸ் அழகிரியின் பதவியும் பறிக்கப்பட்டது இப்படி பாஜகவிற்கு ஆதரவாகவும் அவர்களின் பணிகளை பாராட்டி அழகிரி பேசியதற்காகவே கட்சியிலிருந்து தூக்கப்பட்டார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது ஆனால் இதன் பின்னணியை விசாரிக்கும் பொழுது கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிந்ததாலேயே அவரது பொறுப்பில் வேறொருவர் அமர்த்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.