அதிமுகவில் நிலவும் தலைமை போட்டிக்கு இன்றைய இரு நீதிபதிகள் அமர்வு கொடுக்கும் தீர்ப்பு முற்று புள்ளியாக அமையும் என்று எதிர்பார்த்த நிலையில் அது அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது, தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்து இருப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டாடி வரும் சூழலில் தீர்ப்பின் முழு விவரம் வெளியான சூழலில் தற்போது மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது EPS தரப்பு.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு இன்று கொடுத்தது, அப்போது, நீதிபதிகள், தனி நீதிபதி வெளியிட்ட தீர்ப்பு செல்லாது என்று தெரிவித்தனர். மேலும் ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர் என பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இதையேற்று பலரும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலி ஆனதாகவும், இனி பன்னீர் செல்வம் அதிமுகவின் உறுப்பினர் இல்லை என்றும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர், ஆனால் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முழுவிவரம் வெளியாகி இருக்கிறது அதில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலி ஆனதா இல்லையா? என்று தாங்கள் இப்போது அந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை என்றும் அதன் தீர்ப்பு பிரதான வழக்கில்தான் தீர்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது இதன் மூலம் பன்னீர்செல்வம் தற்போதுவரை ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீடிப்பதாகவே பொருள்படுகிறது, நீதிமன்றம் தீர்ப்பு பழனிசாமிக்கு சாதமாக இருக்கும் என்று பார்த்தால், மாப்பிள்ளை அவருதான் ஆனால் அவரு போட்டிருக்கும் சட்டை என்னோடது என்ற காமெடி வசனம் போல் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதாகம்தான் ஆனால் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் இன்னும் இருக்கிறார் என்பது, EPS ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இடைக்கால பொதுச்செயலாளர் என தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய முடிவிற்கு தற்போதுவரை தேர்தல் ஆணையம் எந்தவித ஒப்புதலையும் கொடுக்க வில்லை என்பதால் நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் அது முழுமையான வெற்றியை யாருக்கும் கொடுக்காது என்று கூறப்படுகிறது.
இதனால் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை EPS ஆதரவாளர்கள் கொண்டாடி கொண்டு இருந்தாலும் நாளையே மேல் முறையீட்டிற்கு ஓபிஎஸ் தரப்பு சென்றால் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கொடுக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படலாம் என்றே பெரும்பாலான அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில் இடியாப்ப சிக்கலில் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தரப்பு சிக்க வைத்து இருப்பது ஒரு புறம் என்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி, மோடி மற்றும் அமிட்ஷாவால் அதிமுக பிரச்னையை தீர்க்க முடியாது என பேசியது பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதுவரை எந்த வகையிலும் OPS -EPS அதிமுக உள்விவகாரங்களில் பாஜக தலையிடவில்லை அப்படி இருக்கையில் ஏன் பிரதமர் மற்றும் அமிட்ஷா குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என டெல்லி பாஜக வட்டாரம் அதிர்ச்சி அடைந்து இருக்கிறதாம் எனவே வரும் நாட்களில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறலாம் எனவும் கூறப்படுகிறது.