பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு செக் வைப்பதற்காக மத்திய இணை அமைச்சர் L.முருகனுக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது, இந்த சூழலில் பரவிய செய்திக்கு அரசியல் விமர்சகர் சுந்தர்ராஜசோழன் பதிலடி கொடுத்துள்ளார் அது பின்வருமாறு :
இணையமைச்சர் L.முருகனுக்கு பாஜக தலைமையகத்தில் அலுவலகம் ஒதுக்கினால் எப்படி அண்ணாமலைக்கு செக்காகும்? கொங்கு பெல்ட்டை குறி வைத்து வேலை செய்கிறது பாஜக.அருந்ததியினர் வாக்குகளை அதிமுக இழக்க ஆரம்பிக்கிறது,அதை அனாமத்தாக திமுக எடுக்க நினைக்கிறது..
இபிஎஸ் Vs செந்தில் பாலாஜி என்கிற இடத்தில் அண்ணாமலை+L.முருகன் என்பதன் வீச்சு புரியாமல் உளறிக் கொண்டிருக்கிறது தமிழக ஊடகங்கள்..இவர்களுடைய அரசியல் அறிவென்பது திமுகவுக்கு சொம்படிப்பது,இல்லாத திராவிடத்தை வீழ்த்த முடியாது என உளறுவதாக காலம் கழிகிறது.
மகளிரணி தேசிய தலைவியாக ஆக்கப்பட்டார் வானதி சீனிவாசன்,இப்போது திருமதா.வானதி CEC உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..இது உண்மையில் மிகப்பெரிய கௌரவம்.
ஆக நாம் அன்று சொன்னபடி அண்ணாமலை + L.முருகன் + வானதி + பாலாஜி உத்தமராசா என சமூகங்களின் பலமான அணிவகுப்பை பாஜக ஏற்படுத்துகிறது.எதிர்காலத்தில் இதை உடைப்பதெல்லாம் சாதரண வேலையல்ல.அடுத்த 10 வருடத்தில் பாஜகவின் வளர்ச்சியை,தமிழகத்தில் அது அடையப்போகும் உயரத்தை கணிக்கத் தெரியாத இணைய கோமாளிகளாக தமிழக ஊடகங்களும் ஆகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்.