உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு திராவிட கழக தலைவர் வீரமணி எச்சரிக்கை விடுத்த நிலையில், வீரமணிக்கு பெரியார் குறித்தும் இந்தி மொழி குறித்து அவர் பேசியது என்ன என எழுத்தாளர் பிரபாகரன் பேசிய வீடியோவை டாக் செய்து ஆப் செய்துவருகின்றனர் பாஜகவினர்.
வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்ததாவது, வங்கதேசம் உருவானதற்கு அடிப்படைக் காரணம் மொழிப் பிரச்சினைதான்!சிங்கப்பூரில் ஆட்சி மொழி ஆங்கிலம்; நான்கு மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் ஒவ்வொரு கட்டத்திலும் ஹிந்தியை விரட்டி அடித்தது தமிழ்நாடு - வரலாறு தெரியாமல் ஒன்றிய அரசு எரியும் நெருப்பில் விரலை வைக்கவேண்டாம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், ஆங்கிலத்தை ஆட்சி மொழியிலிருந்து அறவே நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஹிந்தி மொழியையே பயன்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது, நாட்டில் ஒரு பெரும் புயலையே கிளப்பி வருகிறது.
ஆட்சியாளர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டியவற்றை, கற்காவிட்டாலும்கூட - பாலபாடம். எந்த நாட்டிலும், மக்களிடையே மிகவும் உணர்ச்சியைக் கிளப்பக்கூடிய பிரச்சினை - மொழிப் பிரச்சினையாகும் என்பதே! (Most Sensitive Problem).இதில் கை நுழைப்பது, கொழுந்துவிட்டு எரியும் தீக்குள் விரலை விட்ட விபரீதம் ஆகிவிடும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த சூழலில் பெரியார் இந்தி மொழி குறித்து என்ன பேசினார், அவர் தமிழ் மொழியை சனியன் என்றது தொடங்கி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் பிரபாகரன் கிழி கிழியென கிழித்தார் அந்த வீடியோவை பகிர்ந்து மிஸ்டர் வீரமணி முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள், பிறகு வங்கதேசம் குறித்து பேசலாம் என பதிலடி கொடுத்து வருகின்றனர் பாஜகவினர். எழுத்தாளர் பிரபாகரன் குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு :-