Cinema

வாய் விட்டு கதறும் நடிகர் ஜெய் என்ன போயி இப்படி ஆக்கிட்டாங்களே...! பாஜக சொன்னது நடக்கிறதா?

Actor jai
Actor jai

திரைப்பட நடிகர் ஜெய் அடுத்த விஜய் என ஒரு காலத்தில் பேசப்பட்டவர் தற்போது, ஜெய் அடுத்து சீரியல் நடிகர் என்னும் நிலைக்கு அவரது நிலை கீழ் இறங்கியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் ஜெய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குற்றம் குற்றமே திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேரடியாக வெளியாகிறது.


திரை துறையை பொறுத்தவரை திரையரங்கில் ஒரு படம் வெளிவருவதை தான் நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் விரும்புவார்கள், ஓடிடியில் வெளிவருவதை கௌரவ குறைச்சலாக கருதுவது உண்டு, மேலும் திரையில் வெளியான திரைப்படம் ஒன்று ஒரு மாதத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் கடும் பின்னடைவை அந்த திரைப்படமும் நடிகரும் சந்தித்த தாக கருதப்படும்.

ஆனால் ஜெய் நிலைமை இவற்றை எல்லாம் மிஞ்சி விட்டது, தனியார் தொலைக்காட்சியில் ஜெய் நடிப்பில் உருவான குற்றம் குற்றமே திரைப்படம் நேரடியாக வெளியாகிறது அட்ட மோசமான படங்கள் மற்றும் அதன் ஹீரோ கூட தனது படத்தை தொலைக்காட்சியில் நேரடியாக வெளிவிட நினைக்க மாட்டார்கள் அப்படி இருக்கையில் ஜெய் நடிப்பில் உருவான குற்றம் குற்றமே படம் வெளியாவது ஜெய்யை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

மேலும் ஆளும் கட்சியின் தொலைக்காட்சி என்பதால் வாயை திறக்க முடியாமல் புலம்பி தவித்து வருகிறாராம் ஜெய், எனது நிலைமை சினிமா நடிகர்கள் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்களே என புலம்பி தவிக்கிறார் ஜெய் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். பாஜக கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது எச்சரிக்கை ஒன்றை கொடுத்தது.

"இன்றைய மத்திய பாஜக ஆட்சி குறித்து நீங்கள் திரைப்படம் எடுக்கிறீர்கள் ஆனால் ஒருவேலை திமுக ஆட்சி அமைந்தால் உங்கள் நிலை படு மோசமாக செல்லும், படங்கள் அனைத்தையும் ஒரு குடும்பத்திற்கே விற்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர் இன்று அது தான் நடந்து வருவதாக திரை துறையை சேர்ந்த பலர் வேதனை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது".