இலவச திட்டங்கள் குறித்து பேச உங்களிடம் இரண்டு PHD இருக்கிறதா? அல்லது நோபல் பரிசு பெற்றவரா என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஊடக விவாதம் ஒன்றில் பேசிய நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் முன்பு பேசிய வீடியோவை பகிர்ந்து ptr உங்கள் தலைவர் கருத்திற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர் பாஜகவினர்.
அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தொடர்பான விவாதம் ஒன்றில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தேர்தலில்போது இலவசங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தொடர்பான வாக்குறுதிகளை தலைப்பாக கொண்டு ஆங்கில ஊடகம் ஒன்று விவாதம் நடத்தியது. இதில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசினார்.
அப்போது, இலவசங்கள் என்றால் என்ன? அவற்றை முறைபடுத்த வேண்டுமா .. அப்படியென்றால் யார் அதை செய்வது என நெறியாளர் கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த விவாதம் இதற்கு முன்பு 15வது நிதிக் குழு தனது நெறிமுறைகளை வெளியிட்டப் போதே நடைபெற்றது.
அப்போது ஒரு திட்டத்தை நல்ல இலவச திட்டம், தீய இலவச திட்டம் என எப்படி வரையறுப்பீர்கள் என கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.
அப்போது இலவசம் வழங்கும் கலாச்சாரத்துக்கு எதிராக பிரதமரே அழுத்தம் தருகிறாரே என்ற நேறியாளர் கேள்விக்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ‘உங்களுக்கு ஏதேனும் சிறப்பு நிபுணத்துவம் இருக்க வேண்டும் அல்லது பொருளாதாரத்தில் இரண்டு முனைவர் பட்டங்கள் அல்லது நோபல் பரிசு என நீங்கள் எங்களைவிட சிறந்தவர் என்பதை நிரூபிக்க ஏதாவது ஒன்று செய்திருக்க வேண்டும்.
தனிநபர் வருவாயை அதிகரித்துள்ளீர்கள், வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளீர்கள் என்றால் நீங்கள் கூறுவதை நாங்கள் கவனிக்கலாம்.அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும். இதுதான் சரியான வரையறை என்றும், கடவுளின் வார்த்தை என்றும் ஏன் நம்ப வேண்டும். நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், எந்த தனி மனிதனையும் கடவுள் என்று நம்ப தயாராக இல்லை’ என பேசினார்.
இந்த சூழலில் இலவச திட்டங்கள் தேவையில்லை என முதல்வர் ஸ்டாலின் அதில், விடியல் அன்று: "மக்கள் இலவசங்களை விரும்பவில்லை. மக்களுக்கு நாட்டின் முன்னேற்றம், மக்கள் வருவாய் பெருக வேண்டும், அப்படித்தான் மக்கள் இருக்கிறார்கள். பால் விலையை குறைக்கிறோம்.
விலைவாசியை குறைக்க முயற்சிக்கிறோம். வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், அவவரர் தங்கள் சக்தியை உயர்த்தும் போது, இலவசங்கள் தேவையில்லை என்பது தான் தமிழகத்தின் கோரிக்கை. 'எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம். அடிப்படை பிரச்சினைகள்...(தீர்க்கப்படவேண்டும்)' என்கிறார்கள்" என ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்து ஹலோ மிஸ்டர் PTR உங்கள் தலைவரின் கருத்திற்கு உங்களது பதில் என்ன என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பழனிவேல் தியாகராஜன் கருத்தை ஆதரித்து பேசிவந்த உடன்பிறப்புகள் ஸ்டாலினின் இலவசத்திற்கு எதிரான வீடியோவை பார்த்த பின்பு எதுபோன்ற ஒரு கருத்தை தெரிவிப்பது என்று முழித்து வருவதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.