கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி நமது tnnews24 டிஜிட்டல் பக்கத்தில், இந்துக்கள் தொடர் எழுச்சி காரணமாக தமிழ் சினிமாவில் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெறுவதை முக்கிய தயாரிப்பாளர் தரப்பு தவிர்த்து வருவதாக தகவல் என்ற செய்தியை வெளியிட்டு இருந்தோம் இந்த சூழலில் அதனை உறுதி படுத்தும் விதமாகவும் மேலும் பாலிவுட் மொத்தமாக அடி வாங்கிய நிலையில் நாளை நமக்கும் இது நடக்கலாம் என்பதால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் எடுத்துள்ள புது முடிவு குறித்த செய்திதான் தற்போது தமிழகத்தில் பேசு பொருளாக மாறி இருக்குறது.
இந்திய சினிமாவின் முதல் இடத்தை எப்போதும் இந்தி திரைப்படங்கள் தங்கள் கைவசம் வைத்து இருக்கும் குறிப்பாக கான் நடிகர்களான, சல்மான் கான், சாருக்கான், அமிர்கான் இன்னும் பலர் இந்தி சினேமாவை தங்கள் கைவசம் வைத்து இருந்தனர், ஆனால் அவை அனைத்தும் தற்போது தூள் தூளாக உடைந்ததை பார்த்து யாரெல்லாம் தமிழ் சினிமாவில் கான் நடிகர்களை பின்பற்றி வந்தார்களோ அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுசாந்த் சிங் ராஜ்புட் மர்மமான முறையில் இறந்ததில் இருந்து பாலிவுட் திரைப்படங்களை இந்தி பேசும் மக்கள் புறக்கணிக்க தொடங்கினர், ஒரு கட்டத்தில் இந்து தெய்வங்களை இழிவு படுத்தியதாக கூறி அமீர்கான் உள்ளிட்ட நடிகர்கள் திரைப்படத்தை புறக்கணிக்க தொடங்கினர் தற்போது இதனால் பெருத்த நஷ்டத்தை அடைந்து இருக்கிறது பாலிவுட் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்.
இந்த சூழலில் இனி பாலிவுட் வட்டாரத்தில் இந்தியாவிற்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் எந்த நடிகர்களும் நடிப்பது இல்லை என்ற முடிவிற்கு வந்து இருக்கின்றனர், இது ஒருபுறம் என்றால், தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக நாத்திகம் என்ற போர்வையில் சில இயக்குனர்கள் தொடர்ச்சியாக இந்து மதத்திற்கு எதிரான காட்சிகளை வைத்து இருந்தனர்.
மேலும் குறிப்பிட்ட சில நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா இன்னும் சில இயக்குனர்கள் போன்றோருக்கு எதிராக இந்து அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தனர், ஒரு கட்டத்தில் சில நடிகர்கள் இந்து மதத்தையோ அல்லது ஆளும் பாஜகவை விமர்சனம் செய்தால் அது தங்களுக்கு கிடைக்கும் இலவச விளம்பரமாக கருத்தினர், ஆனால் பாலிவுட் வாங்கிய அடியை பார்த்து, பல முன்னணி நடிகர்கள் இனி இந்து மதத்தை விமர்சனம் செய்வது போன்றோ, பெரியாரிய கொள்கையை உயர்த்தி பிடிப்பது போன்றோ காட்சிகள் வைப்பது இல்லை என முடிவு எடுத்து இருக்கிறார்களாம்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் நெற்றியில் திருநீரோ குங்குமம் போன்றவை இல்லை, மணிரத்தினம் தனது இடத்துசாரிய சிந்தனையை படத்தில் கொண்டுவந்து விட்டார் என பலரும் விமர்சனம் செய்ய தொடங்க ஒரு கட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இதுவே எதிர்பாக வந்து விடுமோ நமது படத்தையும் புறக்கணித்து விடுவார்களோ என்று அச்சப்பட்ட பொன்னியின் செல்வன் பட குழு, நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் காட்சியில் திருநீறு, குங்குமம் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு எதிர்ப்பை குறைக்க வழி செய்தது.
இது ஒருபுறம் என்றால் முன்னணி தயாரிப்பாளர்கள் இப்போது பட கதையில் எந்த அரசியல் கட்சியையோ அல்லது மதத்தையோ விமர்சனம் செய்யாமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் சொல்லும் கதைக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுக்க இருக்கிறார்களாம் , ஏன் வம்பு இன்று பாலிவுட் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் போன்றோருக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கலாம் என முடிவை எடுத்து இருக்கிறார்களாம்.
முன்பு எல்லாம் திரைப்படத்தில் இந்துக்களுக்கு எதிராக காட்சிகள் வந்தால் திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்று பலர் நினைத்த காலம் மாறி தற்போது எங்கே இந்துக்களுக்கு எதிராக காட்சிகள் அமைந்தால் திரைப்படம் ஓடாது மேலும் சிக்கலும் வரும் என தமிழ் சினிமா துறையினர் சிந்திக்க தொடங்கி இருப்பதே அதிரடி மாற்றம் உண்டாகி இருப்பதாக கூறப்படுகிறது .