தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு வருட ஆட்சி நிறைவு பெற்றுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் மக்களின் மன நிலையை அறிய ஆளும் கட்சி சார்பில் மூன்று நிறுவனங்களை கொண்டு சர்வே எடுக்க தனி தனியாக முக்கிய அரசு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க மூத்த அதிகாரி ஒருவரை கொண்டு நடவடிக்கை எடுக்க திட்டமிட பட்டுள்ளது.
இது தவிர்த்து தமிழக அரசில் எடுக்கப்படும் முக்கிய விவகாரங்கள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எப்படி தெரிய வருகிறது, மின்சார கொள்முதல் விவரங்கள் தொடங்கி டெண்டர் விவகாரம், அமல்படுத்த போகும் திட்டங்கள், சிங்கப்பூர் சென்றதன் பின்னணி இதை தொடர்ந்து மகாபலிபுரத்தில் புதிய சட்டமன்றத்தை கட்ட திமுக அரசு நிலத்தை வாங்க உள்ளது என அண்ணாமலை தெருவித்த குற்றசாட்டுகள் மிக பெரிய அளவில் கோட்டையில் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது.
நான்கு நபர்களுக்கு மட்டும் தெரிந்த விவகாரம் எப்படி அண்ணாமலைக்கு தெரிகிறது என புலம்பி கொண்டு இருக்கிறது ஆளும் தரப்பு இந்த சூழலில் தான் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை பூர்வீகமாக கொண்ட அரசு IAS, IPS அதிகாரிகள் என 60 பேர் வரை தொடர்ந்து கண்காணிப்பு செய்ய ஆளும் தரப்பு கடந்த இரண்டு மாதம் முன்பு உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் திமுகவை மட்டுமல்ல அதன் முக்கிய அமைச்சர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தமிழகத்தில் மத்திய உளவு அமைப்புகள் அனைத்து மட்டத்திலும் இறங்கி பணி செய்து பல்வேறு கோப்புகள் மற்றும் முக்கிய பணிகளை டெல்லிக்கு தகவல் கொடுக்கின்றன அங்கிருந்து அது ஆளுநருக்கு அதிகார பூர்வமாகவும் அளிக்க படுகிறது.
மேலும் கட்சி வட்டாரத்திலும் கசிய விடப்படுகிறது, ஆளும் உளவு அமைப்பிற்கு தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் பலர் தங்கள் துறையில் நடக்கும் விவகாரங்கள் குறித்து துல்லியமாக தகவல்களை கொடுக்க அதனை சேகரித்து மொத்த தகவல்களையும் யார் யாருக்கு சென்று சேரவேண்டுமோ அங்கு அளித்து வருகிறதாம் மத்திய உளவு அமைப்புகள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமிட்ஷா புதுச்சேரி செல்வதற்காக சென்னை வந்து இருந்தார், வழக்கமாக நட்சத்திர விடுதி அல்லது ஆளுநர் மாளிகையில் தங்கும் அமிட்ஷா இந்த முறை நேரடியாக விமான நிலையத்தில் இருந்து ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப் மையத்தில் தங்கினார் முழுக்க முழுக்க இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்பதால் எந்த தகவலும் வெளியில் செல்லாமல் பாதுகாக்க இந்த முடிவை அமிட்ஷா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு தான் முக்கிய அதிகாரிகள் பலரை அமிட்ஷா சந்தித்து பேசி இருக்கிறார், அத்துடன் கட்சி ரீதியாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இடையேயும் அமிட்ஷா ஆலோசனை நடத்தி இருக்கிறார், இங்கு தான் RAA கூட்டணிக்கு மூன்று முக்கிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு உள்ளதாம். அதாவது RAA என்றால் ரவி அண்ணாமலை அமித்ஷா என்ற மூவரின் முதல் எழுத்துக்கள்.
கட்சி ரீதியாக முழு பணியை அண்ணாமலை மேற்கொள்ளவும், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப ஆளுநரும், IAS IPS அதிகாரிகளை வட்டத்திற்குள் கொண்டுவர அமிட்ஷாவும் தீவிரமாக களப்பணி செய்து வருகிறார்கள் என்ற தகவல் தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்பெல்லாம் IAS IPS அதிகாரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட மாட்டார்கள் ஆனால் மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் IAS IPS அதிகாரிகளை மத்திய அரசிற்கு திரும்ப பெறுவதில் மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை என்ற ஒரு வரைவு மசோதாவை மாநில அரசுகளுக்கு அனுப்பியது இது விரைவில் சட்டமாக மாறினால் முழுக்க முழுக்க IAS IPS அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்வார்கள் என்பதால் யாரும் மத்திய அரசை பகைத்து கொள்ள தயாராக இல்லையாம்.
இதனால் அனைத்து தகவல்களும் எந்தவித சிரமும் இல்லாமல் மத்திய அரசிற்கு செல்கிறது அதுதான் அண்ணாமலைக்கும் கிடைக்கிறது அதனை அவர் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சொல்லி விடுகிறார் என தெரிவித்து இருக்கிறதாம் மாநில உளவு அமைப்பு, இது தவிர்த்து வரும் 6 மாதங்களில் பல்வேறு மாநில அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்க துறை வருமான வரித்துறை ரைடு நடைபெற இருப்பதாகவும்.
அவர்களுக்கு நெருக்கமான அரசு அதிகாரிகள் வீடுகளில் எப்படி ஜார்கண்ட் மாநிலத்தில் ரைடு நடைபெற்றதோ அதே போன்ற ஒரு நடவடிக்கை எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம் என எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு இருக்கிறதாம். இதனால் RAA கூட்டணியை பார்த்து ஆளும் கட்சி சற்று அரண்டு போகிதான் இருக்கிறதாம்.
அடுத்த வீடியோவில் ஆளும் கட்சியின் ஒருவருட ஆட்சி குறித்து எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் சொல்வது என்ன என்பது குறித்து பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளுங்கள்.