24 special

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை காலம் வேண்டும்?....அண்ணாமலை குற்றச்சாட்டு!

Annamalai, Chennai Rain
Annamalai, Chennai Rain

மழைக்காலம் என்றாலே சென்னையில் மழை குறைந்தளவு பெய்தாலும் சரி, அதிகளவில் பெய்தாலும் சரி மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது, இந்நிலையில், தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 


இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் "சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். 

அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன. தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?" என தெரிவித்துள்ளார். மேலும், நேற்று ககாலை முதல் மழை பெய்ததால் பல இடத்தில் மழை நீர் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டு தான் இருந்தது. 4000 ஆயிரம் கோடி மதிப்பில் 90 சதவீதம் மலை நீர் தேங்காதவாறு பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்த மேயர் பிரியா, இன்று அதிகாலையிலேயே சென்னையில் மழைநீர் தேங்கி நின்ற இடத்திற்கு சென்று அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

ஆனாலும், சென்னையின் பல பகுதியில் உள்ள சாலையில் மலை நீர் அப்புறப்படுத்தாமல் தேங்கி நின்று கொண்டு இருக்கிறது. இதனை எந்த அமைச்சரோ, அல்லது திமுக கவுன்சிலர்களோ கண்டு கொள்ளாமல் இருப்பதாக மக்களிடம் புகார் எழுந்து வருகிறது. கடந்த ஆட்சியிலும் இதே நிலைமை தான் ஏற்பட்டது, இந்த ஆட்சியிலும் இதே நிலைமை தான் தொடர்கிறது மக்கள் புலம்பி வருகின்றனர். அமைச்சர்கள் கள பணிகள் மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் மழை நீர் அப்புறப்படுத்திய இடத்திற்கு சென்று மக்களிடம் பேசி வருகிறார்கள், மழை நீர் இன்னும் அப்புறப்படுத்தாமல் சுரங்க பாதையில் மற்றும் முக்கிய சாலைகளில் தேங்கி தான் இருக்கு அங்கு எல்லாம் வராமல் மழை நீரை அப்புறபத்திய இடத்திற்கு சென்று தங்களது ஆட்சியில் மழைநீர் தேங்காதவாறு பணிகளை மேற்கொண்டு விட்டதாக குறி வருகிறார்கள்.

முதலமைச்சரே இன்று காலை 11 மணிக்கு மேல் தான் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த மழைக்கே இப்படி என்றால் அடுத்த மூன்று நாட்களில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் போது ஏற்படக்கூடிய அசம்பாவிதத்தை எப்படி இந்த அரசு மேற்கொள்ளும் என்ற பயத்தில் மக்கள் வீட்டிலேயே இருப்பதாக தெரிவிக்கின்றனர். 90 சதவீதம் முடித்த பணிகளை காண எதற்காக மேயர் பிரிய அதிகாலையிலே பணிகளை மேற்கொண்டார் என்ற சந்தேகம் மக்களிடத்தில் எழுந்து வருகிறது. #4000  ஆயிரம் கோடி என்ன ஆச்சு? #மிதக்குது_சென்னை  என்ற ஹாஸ்டேக் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.