புதுதில்லி : பாரத பிரதமர் மோடி காணொளி வாயிலாக மத்திய அரசின் நான்கு திட்டங்களின் பயனாளிகளை சந்தித்தார்.குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பயனாளிகள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது என்னால் ஒய்வு எடுக்கமுடியாது என கூறினார்.
பரூச் மாவட்டத்தில் உள்ள உத்கர்ஷ் சமேராவில் நேற்று பிரதமர் உரையாற்றுகையில் " ஒருமுறை நான் எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை சந்தித்தேன். அவர் மிகவும் மூத்த தலைவர். அவர் எனது அரசியல் எதிரி என்றாலும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். ஒருநாள் அவரது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் சரிசெய்யவும் என்னை சந்திக்க வந்தார்.
அவர் என்னிடம் மோடிஜி இந்த நாடு இரண்டுமுறை உங்களை பிரதமராக்கியுள்ளது. இனி என்ன சாதிக்க விரும்புகிறீர்கள். இனி என்ன அடைய விரும்புகிறீர்கள் என கேட்டார். அவரை பொறுத்தவரை இரண்டுமுறை பிரதமர் ஆவதையே சாதனையாக நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்த மோடி எதனால் உருவாக்கப்பட்டார் என்பது அவருக்கு தெரியாது.
குஜராத் மண்தான் என்னை வடிவமைத்துள்ளது. நான் இப்போது ஓய்வெடுக்க முடியாது. நினைத்தது எல்லாம் நன்றாக நடந்துகொண்டிருக்கிறது. என் கனவு நிறைவேறிவருகிறது.உங்கள் இலக்கை நூறு சதவிகிதம் அடையுங்கள். அரசு இயந்திரத்தை பழக்குங்கள். 2014ல் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கிட்டத்தட்ட நமது தேசத்தின் பாதிமக்கள் பல அரசு சேவைகளை பெறாமல் இருந்தார்கள்.
கழிப்பறை ,தடுப்பூசிகள், மின்சாரம் வங்கிக்கணக்குகள் போன்றவை கிடைக்க நூறு மைல் தூரம் கடக்கவேண்டியிருந்தது. ஆனால் இப்போது எல்லாம் நேரடியாக அவர்களுக்கு கிடைக்கிறது. எங்களின் கடின முயற்சியால் பல திட்டங்கள் நூறு சதவிகிதம் மக்களுக்கு சென்றடைந்துள்ளன.கடினமான பணிகளை அரசியல்வாதிகள் தொட பயப்படுகிறார்கள்.
நாங்கள் இங்கு அரசியல் செய்யவரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்திருக்கிறோம். எனக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்தபோது நான் கூறியது எனக்கு கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசிர்வாதம் உள்ளது என. எனதுஅரசாங்கம் புதிய ஆற்றலுடன் புதிய வாக்குறுதிகளுடன் செயல்பட்டு வருகிறது" என பிரதமர் மோடி காணொளி வாயிலாக பேசினார்.