24 special

க்ருஷ்ணஜென்ம பூமி வழக்கு..! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

High Court Judgment
High Court Judgment

மதுரா : மதுராவில் அமைந்துள்ள ஹிந்துக்களின் புனித ஸ்தலமான ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமியை ஆக்கிரமித்து ஷாஹி ஈத்கா மசூதி எழுப்பப்பட்டிருப்பதாகவும் அதை அகற்றகோரியின் மதுரா சிவில் நீதிமன்றத்தில் 2020ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


ஸ்ரீ கிருஷ்ணா விராஜ்மான் அறக்கட்டளை, ரஞ்சனி அக்னிகோத்ரி மற்றும் மூன்றுபேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு செப்டெம்பர் 30 அன்று ட்டிஹல்லுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ரஞ்சனி அக்னிகோத்ரி அக்டோபர் 12, 2020ல் மதுரா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2020 டிசம்பர் 15ல் மனிஷ் யாதவ் என்பவரும் இதுதொடர்பான வழக்கு ஒன்றை சிவில்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

க்ருஷ்ணஜென்ம பூமி சர்ச்சை தொடர்பாக ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில் மதுரா சிவில் நீதிமன்றம் வழக்கை விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. அதையடுத்து மனுதாரர்கள் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த வழக்கு நீதிபதி சலீல் குமார் ராய் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் குப்தா வாதாடுகையில் " மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமிக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் சன்னி மத்திய வக்பு வாரிய உறுப்பினர்கள் மற்றும் இதரநபர்கள் நுழைவதை தடுக்க தற்காலிக தடை விதிக்கவேண்டும்" என குறிப்பிட்டார்.

" மனுதாரர்களின் விண்ணப்பங்களை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. மதுரா சிவில் நீதிமன்றம் அடுத்த நான்குமாத காலத்திற்குள் அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடரும்" என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஷாஹி ஈத்கா மசூதி நிர்வாக தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் இதுவரை ஆறு சம்மன்கள் பெறப்பட்டிருப்பதாக கூறினார்.

ஏற்கனவே வாரணாசியில் உள்ள ஜெகந்நாதர் ஆலய வழக்கும் குதுப்மினார் குறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கவேண்டும் என கோரப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு மனுதாரரை கடிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.