இன்னும் ஐந்து மாத காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது இதற்கான ஆயத்த பணிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கட்சிகளும் விறுவிறுப்பாக செய்து வருகின்றது. மேலும் தொகுதி பங்கீடுகள் குறித்த அறிவிப்புகளையும் ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர்களையும் சில கட்சிகள் அறிவித்து வருகிறது, இந்த வரிசையில் தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக பாஜக கூட்டணியில் எதிர்கொள்ளும் என்று டெல்லி வட்டாரத்திலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் அதிமுக-பாஜக கூட்டணி என்பது 20-20 என்ற தொகுதி பங்கீட்டை நிர்ணயித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் டெல்லி பயணித்த பொழுது செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது அரசியல் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்காகவும் தேர்தல் பங்கெடுப்பது குறித்து முடிவெடுப்பதற்காகவும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் சென்று திரும்பியுள்ளார். இந்த பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சில பாஜக முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மேலும் இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக அதிமுகவிற்கு இந்த தேர்தலில் 20-20 தொகுதி பங்கீட்டை சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் மேலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மட்டும் 20 சீட்டுகள் வேண்டும், குறிப்பாக இனி வரும் காலங்களில் பாஜகவுடன் இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் அதற்காக 20 சீட்டுகள் மொத்தமும் பாஜகவிற்கு தனியாக வேண்டும் என்றும் டெல்லி தலைமை எடப்பாடி பழனிசாமியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டவட்டமான கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா முன்வைத்த பொழுது எடப்பாடி பழனிசாமி 20 சீட்டுகள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு வேண்டுமென்றால் 10 சீட்டுகள் தருகிறோம் என்று பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த பதிலுக்கு டெல்லி தலைமை 'ஓ அப்படியா சரி நீங்கள் விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதற்குப் பிறகு அங்கு எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போய் திரும்பிய எடப்பாடி பழனிசாமி தனது சக நண்பர்களிடம் மிகவும் வருத்தத்துடன் புலம்பியதாகவும் அதற்காக தமிழக பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை தற்போது குறி வைத்து அவர் கூறும் சில கருத்துக்களுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதற்கேற்ற வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் நடை பயணத்தின் பொழுது முத்துராமலிங்க தேவர் மீனாட்சி அம்மனுக்கு அண்ணாவின் ரத்தத்தால் அபிஷேகம் செய்வேன் என்று கூறியதை அதிமுக தரப்பு தங்களுக்கு சாதகமாக அதனை மாற்றுவதற்காக சில மறைமுக தீப்பொறிகளை பற்ற வைத்து வருவதாகவும் தேர்தல் சமயத்தில் சில மறைமுக கருத்துகளை மக்கள் மத்தியில் தெரிவித்து அண்ணாமலைக்கு இருக்கும் ஆதரவை குறைக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகிறது.
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக நாம் கூறும் வரைமுறைகளுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை நாம் தனித்தே கூட நிற்போம் என டெல்லியில் இருந்து கமலாயத்திற்கு செய்தி வந்துள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் நேற்று அண்ணாமலையை பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் சந்தித்த பிறகு பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கூட்டணி குறித்து இரு கட்சி தலைமையும் முடிவெடுக்கும் என கூறியதும் குறிப்பிடத்தக்கது..
தமிழ்நாட்டில் எந்த மாதிரியான முடிவுக்கும் பாஜக தயாராக இருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது, சும்மா இழுத்த இழுப்புக்கெல்லாம் வர இது பழைய பாஜக கிடையாது என அதிமுக தற்போது உணர்ந்திருக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.