சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றியது சனாதனத்தை போற்றுபவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அறநிலைத்துறை அமைச்சராக இருந்து கொண்டு சேகர் பாபுவும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எப்படி சேகர்பாபு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று போராட்டத்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கடந்த ஒரு வரமாக சனாதனம் குறித்து பொது இடங்களில் பேசுவதை கூடுமான வரையில் தவிர்த்து வருகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன..
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கொளத்தூர் எவர்வின் பள்ளியில் மலர்களை கொண்டு பத்தாயிரம் சதுர அடியில் பூக்கோலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் ஆயிரம் மாணவிகள் ஆயிரம் என்ற எண் வடிவில் அமர்ந்து கைகளில் பூக்களை வைத்துக் கொண்டு அசைத்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக நன்றிகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் சேகர் பாபு 'தமிழகம் மட்டுமல்ல உலக முழுவதுமே வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகளிர் கான உரிமை தொகை திட்டத்தை அறிவித்துள்ளார் மேலும் இந்த திட்டத்தில் ஒரு கோடியே ஆறு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்தது முதற்கொண்டு மகளிர் கடன்களை தள்ளுபடி செய்தது கல்விக் கடனை அளித்தது போன்ற திட்டங்களால் தாய்மார்கள் முதல்வரை புகழ்ந்து கொண்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் நீண்ட உடல் ஆரோக்கியத்தோடு முதல்வர் மு க ஸ்டாலின் இன்னும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவார் என்றும் முதல்வரை புகழ்ந்து பேசினார்.
இது மட்டுமில்லாமல் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் வங்கி கணக்கில் ஏற வேண்டிய ஆயிரம் ரூபாய் அதற்கு முதல் நாளே ஏறியுள்ளது எனவே இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் குறை கூற முடியாது அப்படி கூறினால் அவர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று விமர்சனத்தை தெரிவித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் குறுக்கிட்டு சனாதனத்தை பற்றி கேள்வி எழுப்பிய போது திமுக ஆன்மீக வாதம் கட்சி என்ற பதிலை அளித்துள்ளார்.
இது குறித்த பின்னணியை விசாரித்தபோது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சனாதனத்தை பற்றி அமைச்சர் சேகர்பாபு பேசியதற்கு எதிர்த்து போராட்டம் நடத்தியது பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் பரவிவிட்டது. இனி சனாதனம் பற்றி பேசினால் அது அமைச்சர் பதவிக்கே ஆபத்தாக முடியும் என முடிவெடுத்து அப்படியே பதுங்கிவிட்டார் என சில அரசியல் விமர்சகர்கள் தகவல்களை கசியவிடுகின்றனர்.
மேலும் செய்தியாளர்கள் சனாதன பேச்சு எடுத்தாலும் எதையாவது சொல்லி சமாளித்து எஸ்கேப்பாகிவிடுகிறார் அமைச்சர் சேகர்பாபு எனவும் செய்திகள் உலா வருகின்றன. அந்தளவிற்கு அண்ணாமலை நடத்திய போராட்டம் சேகர்பாபுவிற்கு பயத்தை ஏற்படுத்திவிட்டதாக பாஜகவினர் பெருமையாக கூறுகின்றனர். மேலும் இனி சேகர்பாபு பேசவே பயப்படுவார் என வேறு சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.