24 special

உலகிற்கு தீங்கு விளைவித்தால் நிச்சயம் இந்த காளி வருவாள்!

KALI TEMPLE
KALI TEMPLE

எந்த ஒரு சிவன் கோவிலுமே ஒரு மாபெரும் மலையாக அமைந்திருக்கும் அப்படிப்பட்ட கோவில்களில் சிவனை காண்பதற்கு மலை மீது சென்றும் தரிசிக்க வேண்டும், அந்த தளங்களும் தமிழகத்தில் இருந்திருக்கு! ஆனால் சிவன் கோவில் மாட கோவில் போன்று ஒரு கோவில் அமைந்துள்ளது என்று கூறினால் யாராவது நம்புவார்களா! நம்புவார்கள் அந்த கோவில் பற்றி தெரியாதவர்கள்! , ஏனென்றால் உண்மையிலேயே யானைகள் ஏறாதவாறு படிக்கட்டுகள் அமைத்து குன்று போன்று செய்யப்பட்டிருக்கிற மாடக்கோவில்ல சிவன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வரார். அந்த கோவிலோட பெயர் தான் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோவில்! இந்த கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கு, அதோடு தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்காவேரித்தலங்கள் இந்த தலம் 54வது தளம் என்றும் கூறப்படுகிறது. இந்த திருத்தலத்தோட முக்கிய பெருமையாக ஒரு நீண்ட புராண கதையே கூறப்படுகிறது.


அதாவது சோமாசி மாற நாயக்கர் இந்த பகுதியில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த பொழுது சோமையாகம் ஒன்றை நடத்தி அதில் சிவபெருமானை கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று மிகுந்த விருப்பம் காட்டி இருந்தார். ஆனால் எப்படி சிவபெருமானை அழைப்பது என்பது அவருக்கு தெரியாமல் இருந்தது. அதனால் அந்த சமயத்தில் அவரது நினைவிற்கு சுந்தரர் வருகிறார் இருப்பினும் சுந்தர சோமாசிமாற நாயகத்திற்கு தெரிந்தவராக இல்லை அதனால் அவர் சுந்தரருக்கு தினமும் தூதுவளையை அவரது வீட்டு வாசலில் வைத்து விட்டு செல்கிறார். இதனை தெரிந்தது கொண்ட சுந்தரர் சோமாசிமாற நாயக்கரிடம் சென்று எதற்காக இதை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அப்பொழுது சோமாசி மாற நாயக்கர் நான் சோமையாகம் ஒன்று நடத்த உள்ளேன் அதற்கு சிவபெருமானை நீங்கள்தான் வர வைக்க வேண்டும் என்று கூறினார்.

அதன்படியே சுந்தரரும் அவருக்கு வாக்களித்து விட்டுச் செல்ல சுந்தர சுவாமி இடம் கூறி சோமாசிமாற நாயக்கர் மேற்கொள்ள உள்ள சோமையாகத்தில் கலந்து கொள்ளும்படி கூறியதற்கு சம்மதம் தெரிவித்த சிவபெருமான் நிச்சயம் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். இதனை தெரிந்து கொண்ட சோமாசிமாற நாயக்கர் பிரம்மாண்டமான ஒரு சோமையாகத்தை ஏற்பாடு செய்தார். இறைவன் வரப் போகிறார் என்ற தகவல் அறிந்த பல முனிவர்கள் சித்தர்கள் பல பகுதிகளில் இருந்து சோமையாகத்தில் கலந்து கொண்டனர் அப்பொழுது சிவபெருமான் ஒரு மீன் வியாபாரியை போன்று தலையில் மீன் கூடையை வைத்துக் கொண்டும் பார்வதி தேவி மது விற்பவரை போன்று மது குடத்தையும் அவரது பிள்ளைகளாக விநாயகரும் முருகனும் மாறி வர யாகத்தில் இருந்த அனைத்து முனிவர்களும் யாகத்திற்கு தீங்கு ஏற்பட்டு விட்டது அனர்த்தம் நடந்து விட்டது என்று கூறி அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர் அப்பொழுது பதறி போயிருந்த சோமாசிமாறன நாயக்கருக்கு விநாயகர் தனது ரூபத்தை காட்டி வந்தது சிவபெருமான் தான் என்பதை தெரிய வைத்து விடுகிறார் இதனால் மகிழ்ச்சியடைந்த சோமாசிமாற நாயக்கர் சிவனை நோக்கி கைகூப்பி வணங்க சிவனும் தனது உண்மையான சரீரத்தை காட்டி காட்சி கொடுக்கிறார்.

இதனை அடுத்து சோமாசிமாற நாயக்கர் பிரம்மபுரீஸ்வரர் என்ற இந்த மாடக் கோவிலை அமைத்ததாக கூறப்படுகிறது.அதேபோன்று துர்வாச முனிவருக்கு மதலோலா என்ற தேவகன்னியால் பிறந்த அம்பரன் ஆம்பரன் என்ற இருவரும் தனது தவ வலிமையால் பல சக்திகளை பெற்று உலகிற்கு பெரும் இடையூறுகளை செய்து வந்ததால் பெருமாளின் கட்டளைப்படி அம்பிகை காளியாக தோன்றி காளி கன்னிகை உருவெடுத்து அம்பரன் மற்றும் ஆம்பரன் ஆகிய இருவருக்கும் இடையில் சண்டையை ஏற்பட வைத்தாள், அதில் மூத்தவனும் இளையவனும் காளியை சாதாரண பெண் என்று கருதி அவளை அடைய வேண்டும் என்று சண்டை இட்டு மூத்தவனை இளையவன் கொன்று விடுகிறான் பிறகு காளி இளையவனை கொன்று விடுகிறாள், அப்படி காளி ஆம்பரனை கொன்ற இடமே அம்பகரத்தூர் ஆகும். அதனாலே இந்த கோவிலுக்கு அம்பர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் என்ற பேரும் உண்டு.

இதனை அடுத்து காளி தனது கொலை பாவத்தைப் போக்குவதற்கு நீண்ட காலம் தவம் செய்து பிறகு மீண்டும் பெருமானிடம் ஐக்கியமானால் அப்படிப்பட்ட இரு கடவுளின் திருவிளையாடல்கள் நடைபெற்ற இடமே இந்த பிரம்மபுரீஸ்வரர்திருத்தலம் அமைந்த இடம்!இது மட்டும் இன்றி இன்னும் அனேக புராணக் கதைகளும் இதற்கு கூறப்படுகிறது. மேலும் உலக மக்களுக்கு இடையூறு விளைவித்து வந்த அம்பரன் ஆம்பரனை இங்கு வதை செய்ததால் இப்பகுதியில் உள்ள ஆண்கள் எவரும் தீங்கு நடவடிக்கைகளில் ஈடுபட யோசிப்பார்களாம் அதிலும் குறிப்பாக பெண்களை காளியாக நினைத்து வழிபட்டு வருகிறார்களாம் ஏனென்றால் பெண்களுக்கும் உலக மக்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடிய நடவடிக்கைகளில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அம்பரன் ஆம்பரனை போன்று ஏதேனும் செய்தால் நிச்சயம் காளி வந்து அவர்களை வதைப்பதாகவும் ஒரு கதை அப்பகுதி முழுவதும் உலா வருகிறது.