ஒருவரின் உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், எந்த ஒரு சிரமமும் கஷ்டமும் இல்லாமல் உயிர் பிரியவும், அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் வழிபடுவதற்கு ஒரு கோவில் உள்ளது. அதுதான் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் என்னும் ஊரில் அமைந்துள்ள திருமாகாளம் மகாகாளநாதர் கோவில்!!!மனிதராகப் பிறந்தவர்கள் என்றாவது ஒரு நாள் இறந்து போவார்கள் ஆனால் யாரும் அதை விரும்பி ஏற்றுக் கொள்வது கிடையாது!! எனக்கு மரணம் வேண்டாம் என்று நினைத்து பயந்து ஓடுபவர்கள் தான் அதிகம். மரணத்தை பற்றிய பயம் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. நமது உயிரை பறித்துக் கொண்டு மரணத்தை தருபவரை எமன் என்று புராணங்கள் சொல்கின்றன. மரண பயத்தை நீக்கி மனிதர்களுக்கு வாழ்வு தருபவர் சிவன். எனவே எம பயம் நீங்கி ஆயுள் நீடிப்பதற்கு வழிபடவும் பூஜை செய்யவும் பரிகாரங்கள் செய்யவும் தமிழகத்தில் பல கோவில்கள் உள்ளன. ஆனால் மனிதர்கள் 90, 100 வயதினை தொடும் போது அவர்களால் சாதாரணமாக வாழ முடிவதில்லை.
அவர்கள் யாராவது துணையை வேண்டுகின்றனர். சிலர் படுத்த படுக்கையில் கிடக்கும் பொழுது உயிர் இதோ அதோ என்று இழுத்துக் கொண்டே தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களின் உயிர் உடனடியாக பிரிந்து நற்கதிர் அடைய வேண்டும் என்று உடன் இருப்பவர்களை வாய்விட்டு சொல்வதை நாம் பல இடங்களில் கேட்டிருப்போம்!! ஒருவரின் உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல் அவரை இன்னுயிர் சிரமம் இல்லாமல் பிரியவும் வழிபட ஒரு கோவில் இது. மேலும் அசுரர்களாகிய அம்பன், அம்பாசுரன் ஆகியோரைக் கொன்ற பாவம் தீர காளி தேவி வழிபட்ட கோயில் என்ற சிறப்பை பெற்றது இத்தலம்!!இக்கோவிலில் உள்ள பட்சயாம்பிகை அம்மனை திருமணமாகாதவர்கள் வழிப்பட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்று சொல்கின்றனர். மேலும் இந்த அம்மனுக்கு சிவப்பு அரளி பூவை மாலையாக்கி கொண்டு வந்து செலுத்தினால் இந்த அம்மன் நல்ல வழியை காட்டுவாள் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தின் தலவிருட்சம் கருங்காலி மரமாகும்.
வேறு எந்த கோவிலிலும் இல்லாத தல விருட்சம் இந்த கோவிலில் அமைந்துள்ளது என்பது இந்த இந்தக் கோவிலில் தனி சிறப்பாக உள்ளது. சமீபத்தில் இந்த கோவில் கருங்காலி மரத்தின் கன்று ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற திருத்தளத்தில் இதுவும் ஒன்று. இந்த திருக்கோவிலில் உள்ள மோட்சலிங்கம் தனி சிறப்பாக காணப்படுகிறது. இந்த லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டிக் கொண்டால் கடைசி காலங்களில் படுத்த படுக்கையாய் கிடந்து மரண அவஸ்தையில் வாழ்பவர்கள் நிம்மதியாக கண் முடுவதுடன், மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை!! இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இந்த நேரத்தில் சென்று பகவானை வழிபடலாம். மேலும் ஆலயத்திற்கு அருகில் கூத்தனூர் சரஸ்வதி கோவில் மற்றும் பல சிறப்பு வாய்ந்த கோவில்களும் உள்ளது. மோட்சத்திற்காக என்று இல்லாவிட்டாலும் சிறப்பு வாய்ந்த தியாகராஜ பெருமாளையும், காளியையும் தரிசித்து எல்லா நன்மையும் பெற இந்த சிறப்பு வாய்ந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று பார்ப்பவர்கள் ஏராளம்...