ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான , சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் இந்திய அளவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இன்று அம்மாநிலசட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் நடைபெற்றது, அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரபாபு நாயுடு அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்தார்.
இதனால் ஆவேசமடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் ஒரு கட்டத்தில் சந்திரபாபு மனைவி குறித்து ஆளும் கட்சியினர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து இருதரப்பு இடையே வாக்குவாதம் அதிகமானது.இதனால் வேதனையடைந்த சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை எனக் கூறி சத்தியம் செய்து அவரது கட்சியினர் உடன் வெளிநடப்பு செய்தார்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு தொடர்ந்து “கடந்த 2 ஆண்டுகளாக ஆளும் கட்சியினால் நான் அவமானப்படுத்தப்பட்டு வந்தாலும் பொறுமையுடன் இருந்தேன். இன்றைக்கு அவர்கள் எனது மனைவியை விமர்சித்துள்ளனர். நான் எனது வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தான் பேசிக் கொண்டிருந்த போது ஆளும் கட்சியினர் தனது பேச்சை நாடகம் என விமர்சித்ததாகத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தனது கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் தற்போது வேகமாகப் பரவி ஆந்திர அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ள. சூழலில் நாயுடு இந்த நிலைக்கு காரணமே 2019-ம் ஆண்டு சந்திரபாபு எடுத்த முடிவுதான் என ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நாயுடு மோடியை வீழ்த்தமால் விடமாட்டேன் என தீவிரமாக களம் இறங்கினார், நாட்டில் ஸ்டாலின்,மம்தா, அகிலேஷ் என பலத்தரப்பையும் சந்தித்து மோடிக்கு எதிராக அணி சேர்த்தார். ஆனால் முதல்வர் பதவியை இழந்தது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலிலும் படு தோல்வியை சந்தித்தார்.
திமுகவிற்கு வாக்கு சேகரிக்கவும், பிரச்சாரம் செய்தார் நாயுடு , ஆனால் ஸ்டாலின், சந்திரபாபுவை எதிர்த்து வெற்றி பெற்ற ஜெகன்மோகன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார், இந்த சூழலில் மத்திய அமைச்சரையில் இருந்தும் வெளியேறி கூடவே மாநிலத்தில் ஆட்சியை இழந்து இப்போது கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு வந்து இருக்கிறார் நாயுடு.இவை அனைத்திற்கும் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற எடுத்த முடிவுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த ஒரு நிமிடம் யோசித்து இருந்தால் இன்று கண்ணீர் விட்டு கதற தேவை இருந்து இருக்காது !
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.