காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் ஒன்றை மேற்கொண்டு இருக்கிறார், இந்த நடை பயணத்தை தமிழகத்தில் இருந்து குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தொடங்கிய ராகுல் தொடர்ச்சியாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மட்டுமே நடை பயணத்தை மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறார்.
இந்த சூழலில் ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும், ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற வயநாடு தொகுதியுடன் கூடுதலாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி அல்லது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட திட்டம் வகுத்து இருக்கிறார்களாம். அதனை வழுப்படுத்தும் விதமாகத்தான் தமிழகத்தில் விழுந்து விழுந்து விழுந்து சுற்றி வருகிறாராம் ராகுல் என்கின்றனர்.
ராகுலின் தமிழக விசிட் குறித்து அரசியல் விமர்சகர் சுந்தர்ராஜசோழன் குறிப்பிட்டதாவது, ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிடுதை ஒருபோதும் திமுக விரும்பாது.ஒருவேளை ராகுல் நின்று வெற்றி பெற்றால்,தமிழகம் தேசிய கட்சிகளின் தீவிர அரசியல் களமாக மாறும்.
கன்னியாகுமரி - ஸ்ரீபெரும்புதூர் இரண்டிலும் எங்கு ராகுல்காந்தி நின்றாலும் முதுகில் குத்த தயாராக இருப்பார்கள்.ஆனால் ராகுல்காந்திக்கு வேறு வழியும் இல்லை. தமிழகத்தில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அவர் போட்டியிட்டு வெல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் இடமில்லை.
இந்த நேரத்தில் திமுகவின் தயவு மட்டும்தான் காங்கிரஸிற்கு மிகப்பெரிய ஆறுதலாக இந்திய அளவில் உள்ளது. அதே சமயம் காங்கிரஸின் தோழமைதான் 2024 க்கு பின் திமுகவுக்கு தலைவலியாக மாறும் நிலையும் உள்ளது, இந்த இடியாப்பச் சிக்கலான களத்தில் அதிமுகவின் நிலையை வைத்தே இறுதி முடிவுகள் உருவாகும்..பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்.