இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த தகவல் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது, குறிப்பாக தர்மபுரம் ஆதினம் விவகாரத்தில் நாத்திகர்களும் ஆத்திகர்களும் சந்தோசம் படும் வகையில் சுமுக முடிவை முதல்வர் எடுப்பார் என தெரிவித்து இருந்தார் சேகர் பாபு. இந்த விளக்கம் பல்வேறு சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
இந்துக்கள் விவகாரத்தில் நாத்திகர்களுக்கு என்ன வேலை என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர், இந்த சூழலில் இந்து முன்னணியை சேர்ந்த இளங்கோவன் சுத்தி வளைக்காமல் நேரடியாக அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்ததாவது :-
தருமபுரம் ஆதீனத்தில் பட்டண பிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக விரைவில் சுமூக முடிவு.நாத்திகர்கள், ஆத்திகர்கள் என அனைவரின் மனமும் குளிரும் வகையில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக நடக்க பேச்சுவார்த்தை நடக்கிறது-இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
பேச்சுவார்த்தையா? யாரோடு? எதற்கு பேச்சுவார்த்தை?தடை போடும் முன்பு பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? அரசுக்கு,முதல்வருக்கு தெரியாமல் தான் அதிகாரிகள் தடை போட்டார்களா? ஆம். என்றால் முதல்வருக்கு நிர்வாக திறமையில்லை என்பது தெரிகிறது.
முதல்வர் யார் இதில் முடிவெடுக்க? யார் அந்த அதிகாரம் கொடுத்தது அவருக்கு? அரசியலைமப்பு சட்டம் கொடுத்திருக்கிறதா? உணவு விஷயத்தில் என் தட்டு என் உணவு என பேசிய திரிந்த கும்பலுக்கு, என் கடவுள், என் குரு, நாங்கள் எப்படி வழிபட வேண்டும்,எப்படி சுமக்க வேண்டும் என அறிவுரை கூற யாரும் தேவையில்லை என நெத்தியடி அடித்தது போன்று கிழி கிழியென கிழித்துள்ளார் இளங்கோவன்.