24 special

கேரளாவில் பதட்டம்..! தப்பித்த ராகுல்காந்தி..?

Rahul gandhi
Rahul gandhi

கேரளா : கேரளா மாநிலம் மலைப்பாங்கான பகுதி மட்டுமல்லாமல் ஒருபுறம் கடலால் சூழப்பட்டுள்ளது. இங்கு இயற்கையை காப்பற்றவேண்டியே பெரிய தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன உற்பத்திமையங்கள் தொடங்கப்படாமலேயே இருந்துவந்தது. இந்நிலையில் மாநிலத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ள காடுகளை சுற்றி பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்க இயற்கை ஆர்வலர்கள் குரல்கொடுத்துவந்தனர்.


அதிலும் ராகுல்காந்தி எம்பியாக உள்ள வயநாடுபகுதி காடுகள் நிறைந்த பகுதி என கூறப்படுகிறது. காடுகளை சுற்றி பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கும் விஷயத்தில் ராகுல் தலையிட தவறிவிட்டார் என கூறி கேரள மாணவ அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்பியான ராகுலின் அலுவலகத்திற்கு எதிராக சிபிஐஎம் மாணவர் பிரிவுகளில் ஒன்றான எஸ்.எப்.ஐ நேற்று போராட்டம் நடத்தியது.

ராகுலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். ராகுலின் எம்பி அலுவலகத்திற்குள் நுழைந்த அவர்கள் அலுவலகத்தை சூறையாட தொடங்கினர். நல்லவேளையாக ராகுல் நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு விஷயமாக புதுதில்லியில் உள்ளார்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர் " சுமார் 100 மாணவ அமைப்பை சேர்ந்தவர்கள் இருந்தனர். எதிர்பாராத நேரத்தில் எம்பியின் அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள் அலுவலகத்தை சூறையாட தொடங்கினர். அவர்களில் எட்டுபேரை கைதுசெய்துள்ளோம். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்" என தெரிவித்தனர்.

இந்த வன்முறை குறித்து எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவரான சதீசன் கூறுகையில் " வயநாட்டில் தலைவரான ராகுல்காந்தி எம்பியின் அலுவலகம் SFI குண்டர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இது அக்கிரமம். மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போயுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. சிபிஎம் ஒரு கட்டமைக்கப்பட்ட மாபியாவாக மாறிவிட்டது. இந்த தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது" என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.