24 special

வார்த்தைக்கு வார்த்தை "அடிக்கு அடி" மேடையிலே ஜெகத் கஸ்பார் முகத்திரையை கிழித்த பேராசிரியர் !

Prof. Rama srinivasan
Prof. Rama srinivasan

தமிழக முன்னணி ஊடகம் ஒன்றில் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் எதிர் தரப்பை நோக்கி எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றும் கேள்வியாக இல்லாமல் சவுக்கடியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.


தமிழ் ஊடகம் ஒன்றில் தமிழகம் பெரியார் மண்ணா? ஆன்மீக மண்ணா? என்ற தலைப்பில் விவாதம் நடந்தது இதில் கலந்துகொண்ட பாதிரியார் ஜெகத்கஸ்பர் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்து இருந்தார், இந்த சூழலில் அவருக்கு பின்பு தனது கருத்தை தெரிவிக்க மேடை ஏறிய பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் அதிரடியாக தனது கருத்தை தொடங்கினார்.

முதலில் உங்கள் கிறிஸ்தவ மதம் குறித்து நீங்கள் பேசுங்க ஜெகத் கஸ்பர் என தொடங்கி வார்த்தைக்கு வார்த்தை பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்தார், பேராசிரியர் பேச பேச ஜெகத் கஸ்பர் முகம் வாடியது, இந்த வீடியோவை பார்த்த பலரும் இப்படி ஒரு பதிலடியை தான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்தோம், மேடையில் உடனே பதிலடி கொடுத்த பேராசிரியருக்கு வாழ்த்துக்கள் என அவரது கருத்தை வரவேற்று வருகின்றனர்.

நெறியாளர் தம்பி தமிழரசன் இடை மறித்த போது அவரையும் வாங்கு வாங்கிவிட்டார் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஆன்மீக மண்ணா? என தலைப்பு வைத்து விட்டு மதம் குறித்து பேசாமல் எப்படி இருக்க முடியும் ஒரு இந்துவாக எனது கேள்வி இருக்கும் என அடித்து நொறுக்கி விட்டார்.

சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சையாக பேசிவந்த ஜெகத் கஸ்பாருக்கு முறையான வகையில் பதிலடி கிடைத்து இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், அதே நேரத்தில் சில கிறிஸ்தவர்களும் ஏன் இந்து மதம் குறித்து கிறிஸ்தவரான ஜெகத் பேசவேண்டும், ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டது சரிதான் முதலில் நம்மை நாம் மாற்றி கொள்ளவேண்டும் பிறகு அடுத்த மதம் குறித்து பேசலாம் என பேராசிரியர் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பேராசிரியர் ஸ்ரீனிவாசன் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது