அதிமுகவில் தலைமை பஞ்சாயத்து உச்சம் அடைந்துள்ள சூழலில் ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு தரப்பும் கடுமையான விவாதங்களை முன்வைத்து வருகின்றனர், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் இன்றுவரை எந்த கருத்தையும் பாஜகவினர் தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் அதிமுக பொது குழுவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, திமுகவை வீழ்த்தும் சக்தியாக எடப்பாடி உருவெடுத்து இருப்பதாகவும் அவர் தான் சிறந்த தலைவர் என்று பேசினார், இது பாஜகவை நேரடியாக குறிவைத்து பேசுவது போன்ற தோற்றத்தை உண்டாக்கியது, மேலும் சிறந்த எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வருவதாக ஊடகங்களில் விவாதம் எழுந்த நிலையில் அதிமுகவினர் இவ்வாறு பேசியதாக கூறப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணமலை பேசினார்.
கோவை விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க மகளிரணி மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்...பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மகளிரணியில் புதுமையான விஷயங்களை கொண்டு வந்துள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தமிழக மக்களுக்கு உள்ளது. இந்தியாவில் தமிழக மகளிரணி முதலிடத்திற்கு வர வேண்டும். அது தான் வானதி சீனிவாசனுக்கு பெருமை சேர்க்கும்.
அடுத்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய சரித்திர மாற்றத்தை இந்த அணி ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. தமிழகத்தில் ஆளுமைகள் மறைந்த பிறகு அரசியலில் மகளிருக்கு வெற்றிடம் அதிகமாக உள்ளது. சுத்தமான அரசியலை மகளிர் விரும்புகிறார்கள். மகளிர் தான் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.
மத்திய அரசின் 90 சதவீத திட்டங்கள் மகளிர் நலனுக்காக தான் கொண்டு வரப்படுகிறதுஅரசின் வடிவமைப்பு மகளிரை மையமாக வைத்து தான் உள்ளது. மகளிர்கள் வாக்குச் சாவடியில் பா.ஜ.க-விற்கு மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளனர். மகளிரிடம் நம்பிக்கை இருக்கும் வரை மோடியை அசைக்க முடியாது' என அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை தலைமைக்கு வெற்றிடம் என குறிப்பிட்டது எடப்பாடி பழனிசாமி மக்கள் ஏற்றுக்கொள்ளும் தலைமை இல்லை என்பதை உறுதி படுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருது கின்றனர்.