கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றும் யாரை முதல்வராக தேர்வு செய்வது என காங்கிரஸ் கட்சியில் உச்சக்கட்ட மோதல் அரங்கேறி வருகிறது, முன்னாள் முதல்வர் சித்தராமையா டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் சூழலில் தற்போது காங்கிரஸ் மாநில தலைவர் சிவகுமார் டெல்லி சென்று இருக்கிறார்.
நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் மேலிட நிர்வாகம் விருப்பம் இருந்தால் என்னை டெல்லி அழைக்கட்டும் எனக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்து இருந்தார் சிவகுமார், இந்த சூழலில் நேற்று இரவு பிரியங்கா காந்தி நேரடியாக சிவகுமாரை தொடர்பு கொண்டு நீங்கள் டெல்லி வரவேண்டும் என அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது பிரியங்கா காந்தியிடம் சிவகுமார் தன்னை முதல்வராக ஆக்குவதாக உத்தரவு கொடுத்தது நீங்கள்தான் சோனியா காந்தியும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தால் முதல்வர் நீங்கள் தான் என உத்தரவாதம் கொடுத்தார்.
ஆனால் இப்போது என்ன சிக்கல் நான் எவ்வளவு உழைப்பு கொடுத்து இருக்கிறேன் என உங்களுக்கு தெரியாதா? நான் சார்ந்த சமூகம் தாண்டி காங்கிரஸ் கட்சியை கொண்டு சென்று இருக்கிறேன் அப்படி இருக்கையில் எனக்கு முதல்வர் பதவி கொடுத்தால் என்ன தவறு என வெளிப்படையாக பேசி இருக்கிறாராம் சிவகுமார்.
இந்த சூழலில் தான் முதல் இரண்டு ஆண்டுகள் ஒருவர் முதல்வர் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகள் மற்றொருவர் முதல்வர் என பேசி சமாதானம் செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருவரையும் டெல்லியில் வைத்து சமாதானம் செய்ய இருக்கிறதாம்.
காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையிலும் தற்போது முதல்வரை தேர்வு செய்வதில் உண்டான இழுபரி கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி ஒட்டு மொத்த நாடு முழுவதும் கவனத்தை பெற்று வருகிறது இதே போன்ற மோதல் போக்கு தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியது, ராஜஸ்தான் மாநில சட்ட மன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையிலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே மாநிலத்தை ஸ்வீப் செய்தது.
அதே போன்ற நிலைமை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் எதிரொலிக்குமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவில் இருந்து ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்து வந்தது போன்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் ஏதேனும் ஒரு தரப்பு பிரிந்து வருமா என பல்வேறு கேள்விகள் இப்போது எழுந்து இருக்கிறது.
என்னதான் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவார்களா என்ற கேள்வியே இப்போது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.