24 special

துணை முதல்வர் பதவி கேட்கும் வக்ஃபு வாரியர்...! என்ன செய்ய போகிறது காங்கிரஸ்

Vakbu vaariyar
Vakbu vaariyar

புலி வாலைப்பிடித்த கர்நாடக காங்கிரஸ்!  துணை முதல்வர் பதவி கேட்கும் வக்ஃபு வாரியம் கர்நாடகாவில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கர்நாடகா காங்கிரஸ் தனது வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமரின் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் மற்றும் மக்கள் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக வக்ஃபு வாரியத்துடன் கூட்டணி சேர்ந்து கர்நாடகா சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. இறுதியில் தனது வெற்றியையும் பெற்றது கர்நாடகா காங்கிரஸ். 



அடுத்த கட்டமாக கர்நாடக முதல்வர் யார் என்பது தொடர்பாக பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திலேயே கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரசின் கர்நாடக முதல்வர்  பதவிக்கு  சித்தராமையா, டி.கே. சிவகுமார்  இருவரும் கடும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், கர்நாடக துணை முதல்வராக முஸ்லிம் ஒருவர் இருக்க வேண்டும் என்று வக்பு வாரியம் தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு  கோரிக்கை விடுத்துள்ளாராம். 


தற்போது பெங்களூரில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் பொதுக்கூட்டத்தில் கர்நாடகாவின் முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மூன்று துணை முதல்வர் பதவிகளை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டு செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் லிங்காயத், ஒக்கலிகர், முஸ்லிம், தலித் சமூகங்களை சேர்ந்த பலர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ளனர். இந்த சமூகங்களில் லிங்காயத், ஒக்கலிகர், முஸ்லிம் ஆகிய சமூகங்களில் இருந்து தலா ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவர்களை துணை முதல்வர்களாக பதவி ஏற்க வைக்கலாம் என காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டங்களை தவிடிபொடி ஆக்கும் வகையில், கர்நாடக துணை முதல்வராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று வக்ஃபு வாரிய தலைவர் ஷாபி சாடி தெரிவித்துள்ளார். 


மேலும் இது தொடர்பாக கர்நாடக தேர்தலுக்கு முன்பாகவே துணை முதல்வர் பதவியில் முஸ்லிம் ஒருவர் இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம், எங்களுக்கு கொடுக்கப்பட்ட 30 சீட்டுகளில் 15 கிடைத்துள்ளது. முஸ்லிம் வேட்பாளரக்களில் ஒன்பது பேர் வெற்றி பெற்றுள்ளனர் மேலும் காங்கிரஸ் கட்சி தற்போது அடைந்துள்ள வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம், ஒரு சமூகமாக நாங்கள் காங்கிரசுக்கு நிறைய பங்களிப்பை செய்துள்ளோம் தற்போது அவர்கள் எங்களுக்கு திருப்பி பிரதிபலன்களை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. துணை முதல்வராக முஸ்லிமைச் சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும் மேலும் உள்துறை, வருவாய், கல்வி போன்ற ஐந்து முக்கிய துறைகளில் ஐந்து அமைச்சர்களும் எங்கள் சமூகத்திற்கு சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் இதன் மூலமே காங்கிரஸ் எங்களுக்கு நன்றி தெரிவிக்க முடியும் என்றும் கூறியுள்ளார் ஷாபி சாடி. 


இப்படி  வக்பு வாரியத்தினர் துணை முதல்வர் பதவியை முஸ்லிம் ஒருத்தருக்கு தர வேண்டும் என்று கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டுள்ளனர். இதனால் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டிற்குள் காங்கிரஸ் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாஜகவிடமிருந்து மாநிலத்தை கைப்பற்றி தான் வெற்றி பெற்றதாக கொண்டாடிக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் வக்பு வாரியத்திடம் ஆட்சியை அடகு வைக்கும் நிலையில் வந்துள்ளதாக அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.