24 special

திருமாவளவன் போட்டியிடும் தொகுதியில்.... அதிமுகவின் மாஸ்ட்டர் பிளான்..!

Edapaadi palanisamy, Thirumavalavan
Edapaadi palanisamy, Thirumavalavan

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழகத்தில் அரசியலுக்கான பணிகளை திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை வலுப்படுத்த தீவிரம் காட்டியுள்ளது. திமுக சார்பாக  முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் தனது பிரச்சாரத்தை வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளார். இந்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக கட்சி இரண்டு தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது. போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக பக்காவான பிளான் ஒன்றை போட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


அதிமுக கூட்டணியில் தொடர் இழுபறி நடந்து வருகிறது, அதாவது தேமுதிக கேட்கும் தொகுதிகள் அதிமுக கொடுக்க மறுத்து வருவதால் இழுபறி நடப்பதாக கூறப்பட்டது. அதேபோல் பாமக கட்சியும் சேலத்தை குறி வைத்து கேட்டதால் அதிமுக சேலத்தை தனது கோட்டையாக வைத்துள்ளது. இதனால் பாமக கட்சியும் இழுபறியாக நடந்து வந்தது. இதற்கிடையில் பாமக கட்சி, பாஜகவுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கியதால். எப்படி இருந்த அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றபிறகு கூட்டணி அமைக்க கஷ்டப்படுவதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது அதிமுகவுடன் பாமக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி இன்று அல்லது நாளைக்குள் தொகுதிகளுக்கான கையெழுத்து ஒப்பந்தமாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், தேமுதிகவும் சமரசமாக அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இதனால் விரைவில் அதிமுங்க தலைமையில் மெஹா கூட்டணி அமைக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பாமக- அதிமுக கூட்டணி அமைப்பதால் பெரும் நெருக்கடியாக திருமாவளவனுக்கு அமையும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

திருமாவளவன் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியை வாங்கியுள்ளார். சிதம்பரத்தில் கடந்த முறை ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விழுப்புரத்தில் இந்த முறை பாமக கூட்டணி அமைப்பதால் வன்னியர் சமூகத்தில் ஓட்டுக்கள் அதிமுக பக்கம் செல்லும் என்றும் இதனால் விசிகவுக்கு பெரிய அடி விழும் என்றும் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முக்கிய காரணமே விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களது பக்கம் வரும் என்று கணக்கு போட்டார். ஆனால் , அப்படி எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் கடந்த முறை விசிக வென்றது போல் இந்த முறை வெல்வதற்கு வாய்ப்பு குறைவு என தெரிகிறது. 

விழுப்புரம் தொகுதி பொறுத்தவரை அதிமுக + பாமக கூட்டணியில் போட்டியிட்டால் மக்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுக பக்கமே வரும் சூழ்நிலை உள்ளது. சிதம்பரம் தொகுதியும் இந்த முறை திருமாவளவனுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எப்படியோ இந்த தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது. இந்த முறை திமுக தலைமையிலும், அதிமுக தலைமையிலும், பாஜக தலைமையிலும் என்று மும்முனை போட்டியாக அமைந்துள்ளது. சீமான் ஒரு பக்கம் கட்சியின் சின்னத்தை விட்டு நீதிமன்றத்தை நாடி வருகிறார். இதற்கிடையில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.