இன்று காலை செய்தியாளர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று பகிரபட்டது, மாநில மனித உரிமை ஆணையத்தை சேர்ந்த முக்கிய அதிகாரி செந்தில் பாலாஜியை பார்க்க வருகிறார், நிச்சயம் மாநில மனித உரிமை ஆணயை நிர்வாகியிடம் செந்தில் பாலாஜி தனக்கு நேரிட்ட இடர் பாடுகள் குறித்து விளக்கம் கொடுக்க போகிறார் பொறுத்து இருந்து பாருங்கள் என செய்தியாளர்களுக்கு தகவல் கிடைக்க பரபரப்பு உண்டானது.
சொன்ன நேரத்தில் டிப் டாப் கோட் சூட் அணிந்து காரில் உதவியாளர் உடன் ஒருவர் வந்து இறங்கினார், அவரை பார்த்த செய்தியாளர்கள் சற்று குழப்பம் அடைந்தனர், இவர் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணதாசன் தானே இவரா மனித உரிமை ஆணைய உறுப்பினர் என சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை படாத கண்ணதாசன் எங்கே செந்தில் பாலாஜி இருக்கிறார் நான் பார்த்துவிட்டு செய்தியலாளர்களை சந்திக்கிறேன் என கையில் சைகை காட்டி செந்தில் பாலாஜியை சந்திக்க சென்றார்.
செந்தில் பாலாஜியை சந்திக்க சென்றவர் சென்று வேகத்தில் உடனடியாக திரும்பி வந்தார், செய்தியாளர்களை சந்தித்தவர் செந்தில் பாலாஜி துன்புறுத்த பட்டு இருப்பதாக என்னிடம் தெரிவித்தார் என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பதிலுக்கு பத்திரிகையாளர் ஒருவர் சார் அமைச்சர் என்றதும் நேரில் வந்து நலம் விசாரிக்கும் நீங்கள், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டால் நேரில் சென்று பார்ப்பீர்களா? என பதில் கேள்வி கேட்டார் அதற்கு நாங்கள் செல்கிறோம் அதெல்லாம் ஊடகத்தில் முக்கியத்துவம் பெறவில்லை என கூறி மலுப்பினார் கண்ணதாசன்.
மொத்தத்தில் மாநில மனித உரிமை ஆணையர் என்ற முகவரியில் திமுகவை சேர்ந்த ஒருவரே திமுக அமைச்சரை சந்தித்து விளக்கம் கேட்டது தற்போது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.