24 special

முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு...! அவருக்கே ஆப்பாக திரும்பியுள்ளது

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

அமைச்சர் செந்தில் பாலாஜியை எது காப்பாற்றும் என நினைத்து மலை போல நம்பி இருந்தார்களோ? அதுவே தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு எதிராக திரும்பியதோடு மட்டும் இல்லாமல் சட்ட ரீதியாக ஆளும் திமுக அரசிற்கு பெரும் பின்னடவை கொடுத்து இருக்கிறது.


செந்தில் பாலாஜி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தமிழக அமைச்சரவையே நேற்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் குவிந்து இருந்தது முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக சென்று நலம் விசாரித்தார். எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் முதல்வரின் செயலை கண்டித்து இருந்தனர்.

விசாரணை கைதியாக கைது செய்யப்பட்ட நபரை ஒரு மாநிலத்தின் முதல்வரே நேரில் சந்திக்கிறார் என்றால் இது தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையா எனவும் விமர்சனம் எழுந்தது இதெல்லாம் ஒரு புறம் இருக்க தற்போது அடுத்த அதிரடி சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.

செந்தில் பாலாஜிக்கு  ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாக கூறியும் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால் அவருக்கு மருத்துவ உதவி தேவை எனவும் கூறி திமுகவினர் நீதி மன்றத்தை நாடி இருந்தனர். ஆனால் இது ஒரு அப்பட்டமான மோசடி என அமலாக்க துறை கையில் ஆதாரத்தை தயார் செய்து இருக்கிறதாம்.

மேலும் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ அறிக்கை கொடுத்த மருத்துவர்கள் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மாறான ரிப்போர்ட் செய்ய கட்டாய படுத்தி இருக்கலாம் எனவும் அமலாக்க துறை நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்க இருக்கிறதாம்.

தன்னை காப்பாற்றும் ஆயுதமாக செந்தில் பாலாஜி நினைத்து இருந்ததே மருத்துவ அறிக்கையயை தான், அப்படி இருக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அதே ஆயுதத்தை தவறு என நிரூபணம் செய்ய அமலாக்க துறை முடிவு செய்து இருப்பது பெரும் பின் விளைவுகளை செந்தில் பாலாஜிக்கு கொடுக்க இருக்கிறதாம். அமலாக்க துறைக்கு கிடைத்த தகவல் உண்மை எனவும் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு பயந்து நாடகம் ஆடுவது வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது.

இறுதி அஸ்திரமாக மருத்துவ அறிக்கை தன்னை காப்பாற்றும் என நம்பி இருந்த செந்தில் பாலாஜிக்கு தற்போது புதிய ஆப்பு விழுந்து இருப்பது சற்று பதற்றத்தை ஆளும் கட்சிக்கு உண்டாக்கி இருக்கிறது. இவை செந்தில் பாலாஜிக்கு சிக்கல் என்றால் முதல்வர் ஸ்டாலின் அரசு நேற்று சிபிஐ விசாரணைக்கு எதிராக போட்ட மற்றொரு உத்தரவு இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக திரும்பி இருப்பதால் அதை எவ்வாறு கையாளுவது என்ற குழப்பத்தில் மூழ்கி இருக்கிறதாம் ஆளும் கட்சி வட்டாரம்.