முதல்வர் ஸ்டாலின் பாஜகவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அவரது எச்சரிக்கை தலை கீழாக மாறி இருக்கிறது, எங்களை சீண்டி பார்க்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு இருந்தார் அதில்,பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?
செந்தில்பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை! அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?திமுக நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். திமுகவையோ - திமுககாரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!
எனவே, பொறுப்புள்ள மத்திய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் இருக்கும் பாஜக அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எதேச்சாதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.இப்படி முதல்வர் எச்சரிக்கை விடுத்த நிலையில் செந்தில் பாலாஜி விஷயத்தில் தங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும் என திமுகவினர் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் முதல்வர் பேசி கொண்டு இருக்கும் நேரத்தில் அமலாக்க துறை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்கிறார், அவர் விசாரணையில் இருந்து தப்பிக்க போலியாக மருத்துவ ஆதாரங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பார்க்கிறார் என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது, மேலும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவ குழுவினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அமலாக்க துறை புதிய மனுவை பதிவு செய்து இருக்கிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் மேற்கட்ட விசாரணைக்கு டெல்லி அழைத்து செல்வது உறுதி என அமலாக்க துறை வட்டாரங்கள் உறுதி பட இருப்பதால் முதல்வர் பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்தது எல்லாம் கானல் நீராக போய்விட்டதாக அடித்து கூறுகின்றனர் பாஜகவினர்.
இது ஒருபுறம் என்றால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக மாறி இருக்கிறார் மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் கைதி எண் 1440 என்ற எண் வழங்கப்பட்டு இருக்கிறது, நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவ குழு செந்தில் பாலாஜி உடல் பரிசோதனை செய்ய அனுமதி கொடுத்தால் அடுத்த நாளே செந்தில் பாலாஜி டெல்லி திகார் சிறைக்கு அழைத்து செல்வது உறுதி என அடித்து கூறுகிறது டெல்லி வட்டாரங்கள்.