தங்கள் ஆட்சி இல்லாத மாநிலங்களில் கால்பதிக்கும் நோக்கில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது ஆளும் பாஜக. குறிப்பாகதமிழகம், தெலங்கானா, கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை குறிவைத்து, அதற்கான மேலிட பொறுப்பாளர்களை நியமித்து வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் கேம்பிளான் சற்றேவித்தியாசமானது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை வீழ்த்த இரண்டு திட்டங்களை வகுத்திருக்கிறது.முதலில் அதிமுக அமைப்பு பலத்துடன் திமுகவை எதிர்கொள்வது.இரண்டாவது திமுகவின் தலைவர்களை நேரடியாக நெருக்கடிக்குஉட்படுத்தி அதன்மூலம் வாக்குகளை அறுவடை செய்வது.சமீபகாலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைஇரண்டாவது திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்.செந்தில்பாலாஜியை தொடந்து ஆ ராசாவும் அந்த லிஸ்டில் இருக்கிறார் என்கிறது கமலாயல வட்டாரம்.
இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர் நீலகிரி தொகுதியை சுற்றி இருக்கும் விஷயங்களை புட்டு புட்டு வைத்தார். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்மோகன் பக்வத் தலைமையில் தேசிய நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நீலகிரியில் தொடங்கியுள்ளது.வருகிறது 16 ஆம் தேதிவரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.பரவலாக எல்லா மாநிலத்திலும் இந்த கூட்டங்கள் நடைபெறுவது வாடிக்கை. ஆனால் இந்த முறை நீலகிரியில் நடைபெற முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
இந்த கூட்டத்தில் மோகன்பக்வத் மட்டுமின்றி, தத்தாத்ரேய ஹொசபலே, கிருஷ்ண கோபல், மன்மோகன் வைத்தியா,முகுந்தா, அருண்குமார், ராம்தத் சக்ராதார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பல வியூகங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஏற்கெனவே, இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆயுத்த பணிகளில் இருப்பதாக கட்சிவட்டாரங்கள் கூறுகின்றன.தென் சென்னை தொகுதி பூத் கமிட்டி கூட்டங்களில்அவர் கலந்துகொண்டாலும், அவரது முதல் தேர்வாக நீலகிரி தொகுதிஇருக்கிறது. நீலகிரி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் முருகன்,இந்த தொகுதியை தேர்வு செய்யவே, ஒரு சில முக்கியஸ்தர்கள்தந்த ஆலோசனை தான் காரணமாம். இதற்கு இன்னொரு பின்னணி ஆ ராசாதொடர்ச்சியாக இந்துக்களை சீண்டு விதமாக பேசுவது,மனுநீதி குறித்து விமர்சனம் வைப்பது, சூத்திரர்கள்வேசி மகன்கள் என சாஸ்திரம் சொல்வதாக பேசுவது என ராசாவின் பேச்சுக்கள்கடும் விவாதத்தை பொதுதளத்தில் கிளப்பியது.
இதன் காரணமாக ராசாவை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டதாம். 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டராசா, 5 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகளை வாங்கினார்.கூட்டணியில் இருந்ததால் இந்த தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. மாறாக அதிமுக தரப்பில்போட்டியிட்ட தியாகராஜன் 3 லட்சத்து 42 ஆயிரம்வாக்குகளை பெற்றார். கிட்டத்தட்ட 33 சதவீத வாக்குகளைநீலகிரி தொகுதியில் ஏற்கெனவே வைத்திருக்கிறது அதிமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி. எனவே கூடுதலாக வேலை செய்தால் இந்த தொகுதியை கைபற்றிவிடலாம், ராசாவை தோற்கடித்துவிடலாம் என பாஜக நினைக்கிறது.
முன்னதாக இந்த தொகுதி குறித்து ஆராய ஒரு தேர்தல் கணிப்பாளர் மற்றும் அவரது டீமை களத்தில் இறக்கி சர்வேவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ராசாவுக்கு பெரிய ஆதரவு இல்லை என்பதை உறுதி செய்ய பிறகே இந்த தொகுதியும் குறிவைக்கப்பட்டிருக்கிறது.2024 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு என்பதால், இந்த நேரத்தில் இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு நிச்சயமாக இருக்க வேண்டும் என நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதனால் இந்த கூட்டத்தில் தேசிய அளவில் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், தாண்டி தமிழகத்தில் செய்ய வேண்டியவை என்ன என்பது ஆராயப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு நேரடியாக மத்திய பாஜக தலைமைக்குஅனுப்பிவைக்கப்படும். அதற்கு ஏற்றவாறு வியூகங்கள்அமைக்கப்படும் எனவும் கூறினார்.
நாம் டெல்லி வட்டாரத்தில் விசாரித்தபோது ராசாவுக்கு இன்னொருசி க்கலும் காத்திருக்கிறது என்று கூறுகிறார்கள். ஏற்கெனவே 2ஜி மேல்முறையீட்டு வழக்கில் தினசரி வாதங்கள் நடைபெற தொடங்கிவிட்டன. 25 ஆயிரம் கோடி நேரடி இழப்பு ஏற்பட்டிருந்தற்கான ஆதரம் இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி பினாமி சட்டத்தின் கீழ், கோவையில் இருக்கும் 45 ஏக்கர் நிலம் ஆ ராசாவின் பினாமிக்கு சொந்தமானது என கூறி அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் 55 கோடி ரூபாய் எனவும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுசூழல்அ னுமதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அப்போது மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ராசா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வழக்குகள் ஒருபக்கம், அரசியல் நெருக்கடி மறுபக்கம் என ரா சாவுக்கு இரண்டுபக்கத்தில் சவால்கள் காத்திருக்கின்றனஎன கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 2024 நாடாமன்ற தேர்தலுக்கு முன்பாக இன்னும், எத்தனை அதிரடிகள் காத்திருக்கிறதோ... ரகசியங்கள் தொடரும்...