திமுக எம். பி கதிர்ஆனந்துக்கு ஏற்பட்ட சிக்கல்..! கையெடுத்து கும்பிட்ட துரைமுருகன்!அமைச்சர் துரைமுருகனின் மகனான எம்.பி கதிர் ஆனந்த் திமுகவில் அடுத்ததாக வருமானத் துறையிடம் சிக்கி உள்ள நபராக பார்க்கப்படுகிறார். மேலும் இவர் 2012-2013 நிதி ஆண்டிற்கான வரியை 2013 செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் செலுத்தாமல் 2015 ஆம் ஆண்டு வருமான வரியை தாக்கல் செய்ததுடன் வரியை செலுத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வருமான துறையினர் கதிர் ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பி வரியை செலுத்துமாறு அறிவுறுத்திய பின்னரே ஒரு கோடியே நாலு லட்சத்து 94 ஆயிரத்து 60 ரூபாய் வரியை செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே வருமான வரியை உரிய தேதிக்குள் செலுத்த தவறியதால் வருமான வரி துறையினர் வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரி செலுத்தாததற்கு வருமானவரித்துறையால் பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யக்கோரி கதிர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் வரி செலுத்தாததற்கு நீதிமன்றத்தில் வருமானத்துறவினர் வழக்கு தொடர முடியாது என்று கதிர் ஆனந்த் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருந்தார். வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்தாலோ அல்லது தாமதமாக வரி செலுத்தினாலோ அபராதம் விதிக்க மட்டுமே வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதனை மீறி வழக்கு தொடர்ந்தது நியாயமற்றது என்றும்தரப்பில் கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் அதில் தலையிட முடியாது என கூறி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த வருமான வரி துறையினரின் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து தள்ளுபடி செய்தது.. இந்நிலையில் வருமான வரித்துறையினர் தரப்பில் தாமதமாக வரியை தாக்கல் செய்ததுடன் நோட்டீஸ் அனுப்பிய பிறகு வருமான வரியை செலுத்தியதால் வருமான வரி துறையினருக்கு வழக்கு தொடர அனைத்து அதிகாரமும் உண்டு என்று வாதிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேலூரில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது அதில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதன்காரணமாக இந்த வருமானவரித்துறை வழக்கு எம்.பி கதிர் ஆனந்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளது, மேலும் இந்த வருமானவரித்துறை இந்த வழக்கை வைத்து தனது அடுத்த கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த ஆரம்பிக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன! அப்படி வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்தால் வரும் 2024 தேர்தலில் எம்.பி கதிர் ஆனந்த் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிகிறது!
இதற்கிடையில் கதிர் ஆனந்தின் தந்தையான நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் உள்ள புதிய பள்ளிக்கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்கள் அவரை சுற்றி வளைத்து கேள்விகளை எழுப்பினர்.. முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் மாற்ற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் குறித்து எழுப்பிய கேள்விக்கு முதல்வரின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் கட்டாயமாக ஏற்க வேண்டும் என்றும் பெங்களூரில் நடைபெற உள்ள அடுத்த ஆலோசனை கூட்டம் பற்றிய கேள்விக்கு ‘ஐயோ சாமி என்னை ஆள விடுங்க” என்று செய்தியாளர்களை நோக்கி கை கூப்பி கும்பிட்டு காரில் ஏறி சென்றதவும் கூறப்படுகிறது.
ஒருபுறம் மகன் கதிர் ஆனந்தின் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் எங்கே செய்தியாளர்கள் இதனை கேள்வியாக கேட்டுவிடுவார்களோ என ஆளைவிடுங்க என செய்தியாளர்களிடம் தப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.