24 special

பெட்ரோல் குண்டு வீச்சில்.......சிபிஐ விசாரிக்க வேண்டும் எல்.முருகன் வலியுறுத்தல்!

mk stalin, l murugan
mk stalin, l murugan

ஆளுநர் மளிகை மீது பெட்ரொல்குண்டு வீசப்பட்ட சம்பவம் தற்போது தமிழகத்தை உலுக்கி வருகிறது. இதனை காவல்துறை விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்திள்ளார். பாஜக மத்திய இணையமைச்சார் எல் முருகன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்; அப்போது, தமிழகத்தின் உற்பத்தி பொருட்களுடன் சந்திராயன், வந்தே பாரத் ரயில்கள் இந்திய தயாரிப்பாக உள்ளது.


கடந்த 9 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பாஜக ஆட்சி நடத்தி கொண்டு வருகிறது.தமிழகத்தில் தற்போது, சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கவர்னருக்கே தமிழக அரசால் பாதுகாப்பது வழங்க முடியவில்லை சாதாரண மக்களுக்கு இந்த அரசு எப்படி பாதுகாப்பு அளிக்கும்?. கவர்னர் மாளிகையில் பெட்ரொல் குண்டு வீசியவன் தான். பாஜக அலுவலகம் மீதும் பெட்ரொல் குண்டு வீசியிருந்தான்.

சிறையில் இருந்த வந்த இரண்டே நாட்களில் கவர்னர் மாளிகையில் தாக்குதல் நடத்தியுள்ளார். வெளியில் வந்ததும் இவரை கண்டுக்காமல் இருப்பது மிக பெரிய குற்றம். ஆளுநருக்கு தொடர்ந்து தமிழக அரசு அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக திருவாரூர் சென்று, ஆதீனத்தை சந்தித்து விட்டு, கவர்னர் வரும் வழியில், அவரது வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது பெட்ரோல் குண்டு வீச்சு இங்கு ஆளுநருக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தாலே ஆட்சியில் எங்கு பார்த்தாலும் வெட்டுக் குத்து சம்பவங்கள் நிகழ்கின்றன. கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் கூட கஞ்சா விற்கும் நிலையில், சட்டம்- ஒழுங்கு மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியதை சாதாரண நிகழ்வாக பார்க்கக் கூடாது. அந்த நபருக்கு பின்னணியில் இருந்து இயக்கியது யார்? இந்த வழக்கை, சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் முழு உண்மை வரும் என்று கூறினார். 

இந்த ஆட்சியில் தேச விரோதிகள் அதிகரித்துள்ளது, அதாவது நேற்று கோவையில் பாலஸ்தீன கொடியை ஏற்றி உள்ளனர். சென்னை ஸ்டேடியத்தில் 'பாகிஸ்தான் வாழ்க' என்று கோஷம் போடுகின்றனர். தேசவிரோத செயல்கள், தேச விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், கவர்னர் மாளிகையில் குண்டு வீசியதை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும். குண்டு வீசிய நபரை, திமுக  பொறுப்பில் உள்ள வக்கீல் தான் ஜாமினில் எடுத்துள்ளார். ஆனால், சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில்லாமல், மக்களை திசை திருப்பும் விதமாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.திமுக காரனுக்கு சொரணை கிடையாது. திமுக  அரசாங்கத்தை பலமுறை கலைத்தது காங்கிரஸ். அவங்களோடு தான் கூட்டணி வைத்து, கொஞ்சிக் குலாவுகின்றனர்.

பாஜக கட்சியினர் மீதான தாக்குதல் குறித்து நான்கு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகின்றது. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து, தேசிய தலைவர்களிடம் அறிக்கை கொடுப்பார்கள். என்று தெரிவித்தார்.நேற்று தான் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த திமுக அரசு ஆட்சிக்கு வந்தாலே கொலை, குத்து, சட்டம் ஒழுங்கை கூடவே கொண்டு வரும் அது அவரது வரலாறு என்று திமுக அரசை சாடியிருந்தார். தொடர்ந்து திமுக அரசை பல கட்சி தலைவர்களும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் வரக் கூடிய நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்தை தெரிவித்து வருகிறன்றனர்.