விழுப்புரம் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதி நிலைப்பாடு குறித்தும், தமிழ்க்கட்டத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் 1000 தாரததை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக பிரமுகரும், நடிகையுமான நமீதா சரமாரியாக திமுக அரசை விமர்சித்து பேசினார்.
"திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் நம்ம அப்பாவி மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தது, அதிலும் அனைத்து பெண்களுக்கும் 1000 வழங்கப்படும் என்று கூறியது. ஆனால், இப்போது மக்களை ஏமாத்திவிட்டது. 10 சதவீத பெண்களுக்கு கூட இந்த 1000 தொகை முழுமையாக போய் சேரவில்லை என்று சாடினார்.இது குறித்து திமுக்கிவிடம் கேட்டால் கார் இருக்கிற வீட்டிற்கு 1000 ரூபாய் கிடையாது, பைக் இருக்கிற வீட்டிற்கு 1000 ரூபாய் கிடையாது என்கிறார்கள். பைக் இல்லாத வீடு இப்ப எங்காவது இருக்கா? ஒரு வீடாவது பைக் இல்லாமல் இன்னைக்கு நம்மால் பார்க்க முடியாது.
இன்னொரு மேட்டர் இப்ப புதுசா வந்திருக்கு.. புருஷன் இல்லாத வீடுகளுக்கு கூட, 1000 ரூபாய் கிடையாதாம்.வீட்டில் கேஸ் சிலிண்டர் இருந்தாலும் 1000ம் கிடைக்காது என்பது எந்த விதத்தில் நியாயமாகும்? பிரதமர் மோடி அவர்கள் கேஸ் சிலிண்டர் இல்லாத குடும்பத்திற்கு இலவசமாக அனைவருக்கும் கேஸ் அடுப்பு கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்களுக்கும் இந்த 1000 ரூபாய் வரலயாம். இது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துள்ள பச்சை துரோகம். இந்த பாவமெல்லாம் திமுக அரசு அனுபவிக்கும் என்று குற்றம் சுமத்தினார்.
மேலும் திமுகவின் இன்னொரு முக்கிய வாக்குறுதியாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்து இருந்தது. அதிலும் சுவார்சியம் என்னவென்றால் முன்னதாக பேருந்துகளில் பெண்களுக்கு 10ரூபாய் டிக்கட்டும், ஆண்களுக்கும் 10ரூபாய் டிக்கெட் என்று மொத்தமாக 2 பெருகும் 20 ரூபாய் கொடுத்து பயணம் செய்து வந்தனர். ஆனால், இப்போது இலவசம் என்ற பெயரில் ஆண்களிடம் மட்டும் மொத்தமாக 20 ரூபாய் வசூலிக்கிறது. இலவசம் என சொல்லி டிக்கெட் விலை ஏற்றியது எந்த விதத்தில் நியாயம்?
தொடர்ந்து பேசிய நமீதா, இது மாதிரி நிறைய வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் உள்ளது. இது குறித்து முழு ஆதாரம் என்னுடைய டைரியில் வைத்திருக்கிறேன். ஆனால், இப்போது பேச நேரமில்லை. அதனால் தான் சொல்கிறேன் தமிழ்நாட்டில் 'தாமரை' மலர வேண்டும். அப்போதுதான் நம்ம தமிழக மக்களின் வாழ்க்கை நிம்மதியா, வசதியாகவும் இருக்கும்" என்று ஆக்ரோஷத்துடன் பேசிய நமீதா, "ஜெய்ஸ்ரீராம்" என்று முழக்கமிட்டபடி பேச்சை முடித்தார்.
நடிகை நமீதா சொன்னது போல் தமிழக மக்களுக்கு முழுமையாக அனைத்து பெண்களுக்கும் மாதம் 1000 வழங்கவில்லை. அனைத்து பெண்களும் 1000ரூபாய் கிடைக்காததால் செய்வதறியாமல் புலம்பி வருகின்றனர். மேலும் பல ஊர்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எதை வைத்து திமுக மீண்டம் ஆட்சியை பிடிக்கலாம் என்று எண்ணியதோ அதனை வைத்தே தற்போது குற்றம் சாட்டி வருவதால் திமுக கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளதாம்.