24 special

மாடு முட்டி இறந்தவருக்கு மேயர் சொன்ன பதில்!..... கண்டனத்தை தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

sundharam
sundharam

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. கடந்த 18ம் தேதி சென்னையில் சுந்தரம் என்பவர் மாடு முட்டி சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தது அதிர்ச்சியளிக்கிறது என்றும் அதன் காரணத்தை அரசியவாதிகள் விமர்சித்துள்ளனர்.சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் அங்கு நடமாடும் மனிதர்களை முட்டித் தாக்குவது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.


சமீபத்தில் கூட சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பள்ளி சிறுமி ஒருவரை மாடு முட்டி படுகாயம் ஏற்படுத்தியது. அப்போது பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை எழுப்பினர். அதாவது, தெருக்களில் சுற்றி தீரும் மாடுகளை பிடித்து செல்லுமாறு வலியுறுத்தினர். தற்போது மீண்டும் சென்னை மாநகர தெருக்களில் மாடுகள் வலம் வர ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 18 ஆம் தேதி சுந்தரம் என்ற முதியவரை மாடு முட்டியது.

மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சுந்தரம் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மேயர் ப்ரியாவிடம் செய்தியளர்கள் கேட்கையில்; திருவல்லிக்கேணியில் மாடு முட்டிய சுந்தரத்திற்கு ஏற்கெனவே உடல்நல பிரச்சினைகள் இருந்து வந்தது. ஏற்கெனவே அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு மாடு முட்டிய சுந்தரத்திற்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது.

மாடு முட்டியதுதான் இறப்பிற்கு காரணம் என நாம் சொல்லிவிட முடியாது. அவருக்கு உடல்நல பிரச்சினைகளும் இருந்துள்ளது என்று அவரது இறப்பிற்கு பதில் கூறினார். மேயர் ப்ரியாவின் இந்த பதிலுக்கு தமிழ்நாடு மாநில பாஜக துணை தலைவர் நாராயண திருப்பதி கண்டனத்தை தெரிவித்தார். அதாவது "மாடு முட்டிய  முதியவருக்கு ஏற்கனவே BP, சுகர் இருந்துச்சி. மாடு முட்டுனது மட்டுமே அவர் இறந்ததற்கு காரணம் இல்லை" - வணக்கத்திற்குரிய மாண்புமிகு சென்னை மேயர் பிரியா.

நல்ல வேளை! BP, சுகர் இருந்ததால் தான் மாடு முட்டியது என்று சொல்லாமல் இருந்தாரே!!! என்று அவரது பதிலுக்கு விமர்சித்துள்ளார்.சுந்தரம் இறந்தது மாடு முட்டியதின் காரணமாகவே இறந்துள்ளார் அதனை தமிழக அரசு கூற மறுத்து இது போல உடல்நல பிரச்சனையை கூறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இறந்த சுந்தரத்தின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.