24 special

அதிகரிக்கும் கஞ்சாப் புழக்கம்... ஆண் நண்பரின் பழக்கத்தால் கைது செய்யப்பட்ட ஐடி பெண் ஊழியர்

DRUGS ISSUE
DRUGS ISSUE

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் போதை கலாச்சாரமும் கஞ்சா புழக்கமும் பெட்ரோல் குண்டு வீச்சுகளும் ரவுடிகளின் அராஜகமும் தலைதூக்கி உள்ளதை செய்திகளில் பார்க்க முடிகிறது. முன்னதாக  திமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்து முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கமாக பழகி வந்த ஜாபர் சாதிக் போதை கடத்தல் கும்பலின் தலைவன் என்பது தெரிய வந்ததும் அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போதைப் பழக்கம் அதிகமாக காணப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களுக்கு தொடர்பு உள்ளது என்று கோணத்தில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் ஆங்காங்கே பல இடங்களில் பல லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் கைப்பற்றப்படுவதும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


இந்த நிலையில் தனது ஆண் நண்பர் கொடுத்த ஒரு பார்சலை வைத்திருந்த ஐடி பெண் ஊழியர் காவல்துறையிடம் வசமாக சிக்கி உள்ளார். அதாவது சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 15 திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். அதே அடுக்குமாடி குடியிருப்பில் புதுக்கோட்டையை சேர்ந்த சர்மிளா என்ற எம்பிஏ பட்டதாரியும் 20 நாட்களாக தங்கி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தாய் திருத்தணியில் மருத்துவ சிகிச்சையில் இருந்த பொழுது திருத்தணியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர் சுரேஷ் என்பவருக்கும் சர்மிளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின்படி ஷர்மிளா பெங்களூருவில் வசித்து வந்த பொழுதும் சுரேஷ் பெங்களூருவிற்கு சென்று ஷர்மிளாவை சந்தித்து வந்துள்ளார் மேலும் தற்போது சென்னையில் ஷர்மிளா தங்கி வேலை பார்க்கும் பொழுதும் அடிக்கடி அவரை காண சூளைமேட்டிக்கும் வந்துள்ளார். 

அப்பொழுதுதான் சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பார்சலை ஷர்மிளாவிடம் கொடுத்து வைத்து விட்டு பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதற்கிடையிலேயே அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்திற்குள் சந்தேகப்படக்கூடிய நபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சூளைமேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பை கடந்த சில நாட்களாக கவனித்து வந்த போலீசார் குடியிருப்பு நிர்வாகிகளின் அனுமதியைப் பெற்று அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது சர்மிளா வசித்து வந்த அறையில் மட்டும் வித்தியாசமான வாசனை வந்துள்ளது அதனால் அந்த அறையில் சென்ற போலீசார் சோதனை செய்து ஒரு நியூஸ் பேப்பரால் சுற்றப்பட்டு இருந்த பார்சல் ஒன்றை பறிமுதல் செய்துள்ளார். அந்த நியூஸ் பேப்பரானது அசாம் மாநில நியூஸ் பேப்பராகும், மேலும் அந்த பேப்பருக்குள் முழு இலையுடன் கூடிய முதல் ரக அசாம் கஞ்சா இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்த சர்மிளாவிடம் கேட்ட பொழுது, பார்சலுக்குள் என்ன இருக்கிறது என்பதே தனக்கு தெரியாது என்றும் தனது ஆண் நண்பரான சுரேஷ்  இதனை தன்னிடம் கொடுத்து வைத்து விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஷர்மிளாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் முதல் தர கஞ்சாவையும் பரிந்துரை செய்துள்ளனர். இதனை அடுத்து சுரேஷ் தலைமறைவாகியுள்ளார், இருப்பினும் திருத்தணியில் தலைமறைவாக இருந்த சுரேஷை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சுரேஷிடம் போலீசார் உயர்தர முதல் கஞ்சா அசாமில் இருந்து எப்படி கிடைத்தது? எத்தனை ஆண்டு காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்? என்பது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக ஆட்சி படு மோசமான ஆட்சி என்ற கடுப்பில் மக்கள் கொந்தளித்து வருகிற நிலையில் கஞ்சா புழக்கமும் அதிகரித்திருப்பது திமுக ஆட்சியின் மீது இருந்த அதிருப்தியை மேலும் அதிகமாக்கி உள்ளது!