24 special

கண்டித்த இந்தியா..! ஓடிவந்த போயிங் நிறுவனம் !

Flight's
Flight's

புதுதில்லி : இந்தியாவில் வர்த்தக விமானங்கள் மற்றும் கடற்படைக்கான ரோந்துவிமானங்கள் வாங்குவது தொடர்பாக 2005ல் ஒப்பந்தம் MOD (மினிஸ்ட்ரி ஆப் டிபன்ஸ்) உடன் போயிங் நிறுவனம் போட்டிருந்தது. அதன்படி பி 777-200LR  எட்டு விமானங்களும் 15, பி 777-300 ER ரக விமானங்களும் 27 பி787 ரக விமானங்களும் ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு 2005ல் வாங்கப்பட்டது.


மேலும் கடற்படை ரோந்துவிமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு பலவருடமாகியும் ஆப்செட் ஒப்பந்தத்தை மீறியதாகவும் செயல்படுத்த தவறியதாகவும் போயிங் நிறுவனத்திற்கு இந்தியா சோ காஸ் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியது. அதைத்தொடர்ந்து போயிங் நிறுவன உயரதிகாரி  டேவ் கால்ஹாவுன் கடந்த சனிக்கிழமை பிரதமரை புது தில்லியில் வைத்து சந்தித்தார்.



இந்த வருகையின் நோக்கம் சோ காஸ் நோட்டிஸ் என கூறப்பட்டாலும் P-8I  ரக நீண்ட தூர கடல் ரோந்து விமானங்களை இந்திய கடற்படைக்கு வாங்குவதாகும். மூணு பில்லியன் மதிப்பிலான 12 P8I ரக விமானங்களை ஏற்கனவே இந்தியா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தய கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தை செயல்படுத்த தவறிய போயிங் நிறுவனத்தை MOD அதிகாரிகள் மற்றும் பிரதமர் கடிந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போயிங்குடனான ஆப்செட் ஒப்பந்தப்படி அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஆர்டரின் மதிப்பில் 30 சதவிகிதம் அளவிற்கான உற்பத்தி நிதியை இந்தியாவிலேயே செலவிடவேண்டும். ஆனால் போயிங் அதை செய்யவில்லை என்பதால் நோட்டிஸ் அனுப்பப்பட்டதாக MOD வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நிறுவனம் P 8I விமானத்திற்கான பழுதுபார்த்தல், பராமரிப்பு மாற்றியமைத்தல் போன்ற பணிகளை (MRO) இந்தியாவில் செயல்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது.

அமெரிக்க கடற்படை ஆசிய கண்டத்தில் 30க்கும் மேற்பட்ட போயிங் ரக விமானங்களை இயக்கிவருகிறது. இந்த விமானங்களுக்கும் MRO ஆசியாவில் இல்லை. இதையெல்லாம் கருத்தில்கொண்டு அனைத்து போயிங் விமானங்களுக்கும் சேவை செய்வதற்கு இந்தியாவில் அதிநவீன MRO அமைக்கப்பட்டால் 600 மில்லியன் டாலர்களுக்கு மேலான நிதி ஈட்டப்படும். இதனாலேயே MOD போயிங்குடன் பலவருடங்களுக்கு முன்னரே ஒப்பந்தம் போட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து MOD அதிகாரிகள் அந்த நிறுவன அதிகாரியிடம் நீங்கள் ஒப்பந்தத்தை மதிக்க தவறியதை கருத்திக்கொண்டு இனி எதிர்காலத்தில் வரும் ஒப்பந்தங்களை நாங்கள் ஏன் மறுக்கக்கூடாது என கடிந்துகொண்டுள்ளது. இருப்பினும் போயிங் நிறுவன அதிகாரி டேவ் கால்ஹாவுன் இந்தியாவின் கோரிக்கைக்கு கட்டுப்படுவார் என தெரிகிறது. இந்த ஒப்பந்தம் தொடரப்பட்டால் ஆசியாவிலேயே MRO கொண்ட முதல் கடற்படைத்தளமாக இந்தியா மாறும் என்பது திண்ணம்.