24 special

மாலத்தீவை மண்டியிட வைத்த இந்தியா - PM மோடியின் பயண சீக்ரெட்.. முழங்கிய 21 குண்டுகள்....இனி அந்த நாட்டிலும் நம்ம கொடிதான்..

PMMODI,MUHAMMADMUIZ
PMMODI,MUHAMMADMUIZ

மாலத்தீவு அதிபராக முய்சு, பதவியேற்ற சில வாரங்களில் இந்தியா எதிர்ப்பு நாடுகளான துருக்கி மற்றும் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டர் பீஜிங்கில் இருந்து திரும்பி வந்த கையோடு, இந்தியாவை மட்டுமே நம்பி தன் நாடு இல்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தார்.


சரக்கு கட்டண உயர்வு, செங்கடலில் ஹவுதி படையினரின் தாக்குதல் போன்றவற்றால் அது பகல் கனவானது. எனவே, இன்றளவும் மாலத்தீவுக்கான பெரும்பாலான உணவு பொருட்கள் நம் துாத்துகுடி துறைமுகத்தில் இருந்து தான் அனுப்பப்படுகின்றன.இது ஒரு புறமிருக்க, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, முய்சுவின் அரசு, தன் நாட்டின் பொருளாதார பிரச்னையை எதிர்கொள்ள சீனா உதவும் என்ற தவறான நம்பிக்கையில் அவசியமே இல்லாமல் இந்தியாவை குறை கூறினார்.

கடந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பாரதத்தில் உள்ள லட்சத்தீவுக்கு மோடி சென்ற பிறகு, மாலத்தீவி பொருளாதாரம் ஆட்டம் கண்டது. மாலத்தீவு அரசு நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்தவர்கள் பிரதமர் நரேந்திர மோதி குறித்து சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிட்டனர். . அந்தக் கருத்துக்கள் அவர்களது தனிப்பட்டக் கருத்துக்கள், அவை அரசாங்கத்தினுடையது அல்ல.  என் மாலதீவு கூறியது. மேலும் அவர்களின் கருத்துக்கு எதிர்வினைகள் கிளம்பியதையடுத்து  மன்னிப்பு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.  மேலும் இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க  மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பபுறக்கணிக்க ஆரம்பித்தார்கள். 

"முதலில் இந்தியாவிற்கு மாற்றாக சீனா மற்றும் வளைகுடா நாடுகளை பார்க்கத் தொடங்கிய மாலத்தீவு அரசு, விரைவில் யதார்த்தத்தை உணர்ந்துவிட்டது. இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதைத் தவிர முய்சுவுக்கு வேறு வழியில்லை என இந்தியாவிடம் மண்டியிட்டது. இதற்கிடையே தான் மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு பதவியேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்நாட்டிற்கு முய்சுவின் அழைப்பின் பேரில் பயணம் செய்த முதல் வெளிநாட்டு தலைவர் மோடியே ஆவார்.பிரதமரின் வருகையை மாலத்தீவு அரசு விழா போல் கொண்டாடியது. தலைநகர் மாலே விமானநிலையத்தில் நேரடியாக வந்து பிரதமரை வரவேற்றதாகட்டும், பின்னர் நடந்த அதிகாரப்பூர்வ வரவேற்பில் அளித்த 21 -குண்டு மரியாதை ஆகட்டும், அதிபர் முய்சுவின் அரசு இந்திய விருந்தினருக்கு எந்தவொரு குறையும் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கருத்தாக இருந்தது.

கடந்த ஆண்டுகளில் இந்திய உதவியுடன் நிறைவேற்றப்பட்ட பல்வேறு கட்டமைப்புகளையும் துவக்கி வைத்தார். இவை தவிர, இரண்டு நாடுகளும் எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.அதில், இரு நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை துவக்குவதற்கான ஒப்பந்தமும் அடங்கும்.முய்சு அரசால் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் சீனாவுடன் தடையில்லா வர்த்தகம் செயல்படுத்தப்பட்டது. இது மாலத்தீவிற்கு அதீத அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதை தொடர்ந்தே இந்தியா இந்த முன்னெடுப்பை செய்துள்ளது.

இந்த பயணத்தில் பிரதமருடன் நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர்நிலை குழுவும் சென்றிருந்தது.  பதவியேற்ற பின், முய்சு இந்தியாவிற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தார். அந்த நிலையில் இருந்து தற்போது முழுதுமாக மாறி, இந்தியா மட்டுமே தன் நாட்டின் நம்பிக்கைக்குரிய நண்பன் என்ற முடிவை அவர் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

மாலைதீவுக்கு அந்த நாட்டின் தலைநகரில் மோடி தங்கியிருந்த இரு நாட்களிலும் அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு அவரை வரவேற்றனர்.சமூக வலைதள பதிவுகளை வைத்து பார்க்கும்போது, அவர்கள் தங்கள் தலைவரை அந்த அளவிற்கு நம்பவில்லை என்ற எண்ணமே தோன்றியது.இந்தியாவின் உதவியுடன், பிரதமர் மோடியின் ஆசியுடன் மட்டுமே தங்களது நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவை சீர்படும் என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.