24 special

ஆபரேஷன் சிந்துார் ருத்ரதாண்டவம் ஆடிய ஜெய்சங்கர்! தெறித்தோடிய காங்கிரஸ்! எதிர்கட்சிகளை அலறவிட்ட தமிழன்!

JAISHANKAR,RAHULGANDHI
JAISHANKAR,RAHULGANDHI

மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்த விவாதம் அனல்பறக்க நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத்சிங் ஆகியோர் வேற லெவலில்  கர்ஜித்துவிட்டார்கள்.. ஆப்ரேசன் சிந்துார் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் வெளுத்து வாங்கினார். காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்ற பெயரில் இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து அமைதி பேச்சுவார்த்தைக்கு அடி பணிந்தது. இது இந்தியாவே கொண்டாட்டப்பட்ட நேரமாக இருந்தது. ஆனால் கேவலமாக டசில அரசியல்வாதிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்தார்கள். மக்களவையில் இது இது தொர்பாக விவாதம் வேண்டும் என அமளியில் ஈடுபட்டார்கள். 


ஆப்ரேசன் சிந்துார் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பேசுகையில் : நீங்கள் ஏன் தாக்குதலை திடீரென்று நிறுத்தி விட்டீர்கள் என்று எங்களை கேட்கிறீர்கள். ஏன் மேலும் தாக்குதலை தொடர வில்லை என்று கேட்கிறீர்கள். கேட்பவர் யார் என்றால், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே சிறந்த நடவடிக்கை என்று அமைதியாக இருந்தவர்கள் தான்.

கடந்த 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஷார்ம் ல் ஷேக் நகரில் நடந்தது தான் பதில் நடவடிக்கை. எகிப்து நாட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய பாகிஸ்தான் பிரமுதர் யூசூப் ரஸா ஜிலானியுடன் பேச்சு நடத்தினார். முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பலுசிஸ்தானில் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி குறிப்பிடப்பட்டது. அந்த மாநிலத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு இந்தியா காரணம் என்பது போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் அந்த அறிக்கை அமைந்திருந்தது

அப்போதைய காங்கிரஸ் அரசும், பாகிஸ்தான் பிரதமரும், 'பயங்கரவாதம் தான் இரு நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல்' என்று ஒப்புக்கொண்டனர். முதல் முறையாக பலுசிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்பட்டது. நீங்கள் மும்பை பயங்கரவாத தாக்குதலையும், பலுசிஸ்தானையும் ஒரே தட்டில் வைத்து விட்டீர்கள்.நான் சீனாவுக்கு நமது நாட்டின் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக சென்றேன். நான் ஒலிம்பிக் போட்டிகளை பார்ப்பதற்காக போகவில்லை. கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை காண சென்றிருந்தனர் அதை குறிப்பிட்டது வெளுத்துவாங்கி விட்டார் ஜெய்சங்கர் மேலும் அவர் பேசுகையில்  நான் ரகசிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த சீனா செல்லவில்லை. நமது நாட்டின் ஒரு அங்கமான ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் மக்களுக்கு, சீனா ஸ்டேப்பிள் செய்யப்பட்ட விசா வழங்கியபோது, ஒரு சிலர் ஒலிம்பிக் போட்டிகளை கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர் என எதிர்கட்சிகளை வெளுத்து வாங்கிவிட்டார்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஈடுபாட்டை நிராகரித்த அவர், தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் தான் கோரிக்கை விடுத்ததாக விளக்கமளித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில், வெறும் 3 நாடுகளே பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளதாக கூறிய அவர், பாகிஸ்தானும் சீனாவும் 6 தசாப்தங்களாக ஒத்துழைத்து வருவதாக கூறினார்.

மேலும், சீனாவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் விரிவுரைகளை வழங்குவது விசித்திரமாக உள்ளது என கிழித்து தொங்கவிட்டார்.