24 special

இந்தியாவுக்கு எதிராக வந்த நோட்டா! தலைக்கு மேல ட்ரோன்களை பறக்கவிட்டு அடித்து விரட்டிய ரஷ்யா!

DONALDTRUMP,VLADIMIRPUTIN
DONALDTRUMP,VLADIMIRPUTIN

அமெரிக்காவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை இந்தியா அது போன்ற சம்பவம் ஒன்றை செய்துள்ளது இந்தியா. ஏற்கனவே ரஷ்யா இந்தியா உடனான கச்சா எண்ணெய் வர்த்தக பரிமாற்றம் அமெரிக்காவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.  மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் நம் நாடு கேட்கவில்லை. இந்நிலையில் தான் இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு சீராக உள்ளது. அதனை தடுக்க நினைத்தால் தோற்று போவீர்கள் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்தது.


ம. அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா, சீனாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகளையும் வரி விதிக்க வலியுறுத்தி வருகிறார் மிரட்டி வருகிறார் டிரம்ப், டிரம்ப் மிரட்டல் விடுத்த இரு நாட்களில் அமெரிக்கா அங்கம் வகிக்கும் ‛நேட்டோ' அமைப்பின் நாடான போலாந்துக்குள் ட்ரோன்களை அனுப்பி மிரட்டியது ரஷ்யா.இதற்கிடையில் 

இதற்கிடையில் நம் நாடு ரஷ்யாவுடன் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளது. நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் நீண்டகாலமாக நல்ல நட்பு உள்ளது.குறிப்பாக ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படுகிறது. இப்படியான சூழலில் தான் ரஷ்யா - பெலாரஸ் இணைந்து நடத்தும் ‛ஜபாட் 2025' ராணுவ கூட்டு பயிற்சியில் நம் நாடு சேர்ந்துள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் தலைமையிலான ஐந்து நாள் பயிற்சியில் 65 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த 57 இந்திய ராணுவ வீரர்கள், இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 65 வீரர்கள் நிஸ்னியில் உள்ள முலினோ பயிற்சி மைதானத்துக்கு சென்றுள்ளனர். அங்கு நடைபெறும் ஜபாட் கூட்டு பயிற்சி'யில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் இந்தியா மட்டுமின்றி ஈரான், வங்களாதேஷ், புர்கினா பாசோ, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் மாலி உள்ளிட்ட நாடுகளின் வீரர்களும் பங்கேற்றனர். இந்த பயிற்சியில் அணுஆயுதத்தை வீசும் விமானங்கள், போர்க்கப்பல்கள், கனரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம், 1 லட்சம் பேர் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ சீருடையில் சென்று பயிற்சியை மேற்பார்வையிட்டதோடு வீரர்களுடன் கலந்துரையாடினார். அனைத்து வகையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்று வீரர்களுக்கு உற்சாகப்படுத்தினார்.இந்த பயிற்சி ரஷ்யா, பெலாரஸில் உள்ள 41 பயிற்சி தளங்களில் நடைபெற்றது. 33 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட 247 கடற்படை கப்பல்கள் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது.

ரஷ்யா தனது அண்டை நாடான போலந்தில் ட்ரோன்களை அனுப்பியது. போலந்து அமெரிக்கா அங்கம் வகிக்கம் நேட்டோ அமைப்பில் உள்ளது. இதனால் நேட்டோ சார்பில் போலந்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் ரஷ்யா - பெலாரஸ் கூட்டு பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது. இதனால் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மேலும் ரஷ்யா மீது இந்தியா கொண்ட நம்பிக்கை, இந்தியா மீது ரஷ்யா கொண்ட இந்த நம்பிக்கையால் அமெரிக்கா கதற தொடங்கி உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் உள்பட அமெரிக்க அமைச்சர்கள், வர்த்தக ஆலோசகர்கள் தொடர்ந்து கதறி வருகின்றனர்.